விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… அட சூப்பரான அப்டேட்டா இருக்கே !

சென்னை : விஜய்யின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அதே போல, அனிருத் இசையமைப்பில் உருவாகி வந்த பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

தளபதி 66

தளபதி 66

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இந்த படத்தினை தயாரித்து வருகின்றனர். தமன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வருகிறார்.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இந்த படத்தின் பூஜையும், சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இதில், விஜய், ராஷ்மிகா, வம்சி, தில் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தளபதி 66, படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இப்படத்தில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம், யோகி பாபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

தளபதி 66 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவதாக தகவல்கள் வெளிவந்தது. இதனை தற்போது லோகேஷ் உறுதி செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.இத்திரைப்படம் ஜூன்3ந் தேதி வெளியாக உள்ளது.

டபுள் சர்ப்ரைஸ்

டபுள் சர்ப்ரைஸ்

மேலும் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவர் படத்தின் அப்டேட்ஸ் வெளியாவது வழக்கம். அப்படி இந்தமுறை தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் தளபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X