பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி.. ஆச்சர்யத்தில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்.. எதிர்பார்க்காத என்ட்ரி!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் எதிர்பார்க்காத என்ட்ரியாக ஜெயம் ரவி வந்து ரசிகர்களையும் ஹவுஸ்மேட்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் மாதம் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கியது.

இன்னும் 3 வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

எவிக்‌ஷன் டே

எவிக்‌ஷன் டே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக் கிழமையானாலே எவிக்‌ஷன் டே தான். இந்த வாரம் யார் வெளியே போகிறார் என்கிற சர்ப்ரைஸ் இப்போதெல்லாம் இருப்பதில்லை என்றாலும், அந்த ஷோவில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் ஒளிந்திருப்பது வழக்கம். அதே போல இந்த சன் டே பிக் பாஸ் ஷோவிலும் சூப்பர் சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு இருக்கப் போகிறது என்பதை முதல் புரமோவே அம்பலப்படுத்தி உள்ளது.

எதிர்பார்க்காத என்ட்ரி

எதிர்பார்க்காத என்ட்ரி

இன்றைய முதல் புரமோ ஷார்ப்பா 9 மணிக்கு காலையில் வெளியாகி விட்டது. நடிகர் ஜெயம் ரவி செம சிம்பிளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்ததை பார்த்ததும் ஹவுஸ்மேட்கள் அனைவரும் வாய் பிளந்து உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரம்யா பாண்டியன் எக்ஸ்பிரஷன்லாம் வேற லெவல்.

அடுத்த நொடி ஆச்சர்யம்

அடுத்த நொடி ஆச்சர்யம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட அடுத்த நொடி ஆச்சர்யங்கள் ரசிகர்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களையும் வியக்க வைத்து வருகின்றன. முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இணைந்த தருணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயம் ரவி அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

சூப்பரா விளையாடுறீங்க

சூப்பரா விளையாடுறீங்க

ஹவுஸ்மேட்களை பார்த்து பேசிய ஜெயம் ரவி, வின்னிங் டைம் நெருங்கிட்டே இருக்கு, சூப்பரா விளையாடுறீங்க, பயங்கரமா இருக்கு.. செம என்டர்டெயின்மென்ட்டா இருக்கு.. உங்களுடைய உண்மையா தனித்துவத்தை காட்டினாலே போதும், நாங்க வெளியில வேற மாதிரி பார்த்துட்டு இருக்கோம்.. சின்சியரா பண்றீங்க அது க்ளீனா தெரியுது என்று பாராட்டித் தள்ளி விட்டார்.

வெறித்தனமான பக்தன்

வெறித்தனமான பக்தன்

ஜெயம் ரவியிடம் ரெகுலரா பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்குறீங்களா என கமல் கேட்க, நீங்க எது பண்ணாலும் நான் பார்ப்பேன் சார்.. நான் உங்களோட வெறித்தனமான பக்தன் என ரொம்பவே பணிவாக ஜெயம் ரவி பேசியதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பூமி டிரைலர்

பூமி டிரைலர்

ஜெயம் ரவியின் பூமி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சார் முன்னிலையில், அந்த டிரைலரை ஜெயம் ரவி வெளியிடுவார் என இந்த முதல் புரமோவை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. வேற என்ன ஸ்பெஷல் இருக்கு என பொறுத்திருந்து பார்ப்போம்.

Recommended Video

விஜய் கூட DANCE ஆட முடியாது | ACTRESS MEGHA AKASH CHAT PART - 02 | Filmibeat Tamil
அனிதாவை அழைத்து வருவாரா?

அனிதாவை அழைத்து வருவாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எவிக்‌ஷன் இன்று நடைபெற உள்ள நிலையில், ஜெயம் ரவி அனிதா சம்பத்தை அழைத்து வருவாரா? என்கிற எதிர்பார்ப்பும் அனிதா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இல்லை என்றால், பூமி படத்தின் டிரைலரை மட்டும் வெளியிட்டு விட்டு கிளம்பி விடுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X