வெளியே இருந்து உங்களை வேற மாதிரி பார்க்கிறோம்.. தீவிர பிக் பாஸ் ஃபேன் நான்.. ஜெயம் ரவி செம!
சென்னை: அடுத்த நொடி ஆச்சர்யமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி அதிரடியாக வந்து தனது ரசிகர்களையும் ஹவுஸ்மேட்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
கமல் சொல்லும் போது, யாரோ பிக் பாஸ் ஃபேன் போல வரப் போறாரு போல என இருந்த ரம்யா பாண்டியன், ஜெயம் ரவியை பார்த்தவுடன் தனது மொத்த பல்லையும் வெளியே காட்டி அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன், நீங்க எதை செஞ்சாலும் பார்ப்பேன் நான் உங்க தீவிர பக்தன் சார் என ஜெயம் ரவி ரொம்பவும் பணிவுடன் பேசி கமல் ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

பிக் பாஸில் ஜெயம் ரவி
சன் டே பிக் பாஸ் நிகழ்ச்சி, நடிகர் ஜெயம் ரவியின் வருகைக்கு பிறகு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் நிகழ்ச்சியாகவே மாறி விட்டது. பிக் பாஸ் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த ஜெயம் ரவி ரசிகர்களையும் ஞாயிற்றுக் கிழமை அந்த நிகழ்ச்சி கட்டிப் போட்டு விட்டது.

பிக் பாஸ் ரசிகர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட அடுத்த நொடி ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. இன்றைய அடுத்த நொடி ஆச்சர்யம் தீவிர பிக் பாஸ் ரசிகர் ஒருவர், பல பரிசோதனைகளை கடந்து இந்த மேடையில் உங்களை சந்திக்க வேண்டும் என ரொம்பவே விருப்பப்படுகிறார் பார்த்து விடுவோமா என கமல் அறிமுகம் கொடுக்க ரொம்ப சிம்பிளாக சிரித்த முகத்துடன் ஜெயம் ரவி மேடையில் நுழைந்ததும் ரசிகர்கள், போட்டியாளர்கள் நிச்சயமாகவே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

வேற மாதிரி பார்க்கிறோம்
ஹவுஸ்மேட்களை பார்த்து பேசிய ஜெயம் ரவி, என்ன சார் ஹவுஸ் ஃபுல்லா அழகா இருந்தது, இப்படி குறைஞ்சிடுச்சே என கேட்டுவிட்டு, வின்னிங் டைம் நெருங்கிட்டே இருக்கு, சூப்பரா விளையாடுறீங்க, பயங்கரமா இருக்கு.. செம என்டர்டெயினிங்கா இருக்கு.. உங்களுடைய உண்மையான தனித்துவத்தை காட்டினாலே போதும், நாங்க வெளியில வேற மாதிரி பார்த்துட்டு இருக்கோம்.. சின்சியரா பண்றீங்க அது க்ளீனா தெரியுது என்று பாராட்டித் தள்ளி விட்டார்.

எது பண்ணாலும் பார்ப்பேன்
ஜெயம் ரவியிடம் ரெகுலரா பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்குறீங்களா என கமல் கேட்க, நீங்க எது பண்ணாலும் நான் பார்ப்பேன் சார்.. நான் உங்களோட வெறித்தனமான பக்தன் என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

பூமி டிரைலரை பாராட்டிய போட்டியாளர்கள்
ஜெயம் ரவியின் பூமி படத்தின் டிரைலரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சார் முன்னிலையில், ஜெயம் ரவி வெளியிட்டார். அந்த டிரைலரை பார்த்த கமல்ஹாசன் மற்றும் ஹவுஸ்மேட்கள் வெகுவாக ரசித்து ஜெயம் ரவியையும் பூமி படத்தின் மையக்கருவான விவசாய பிரச்சனை குறித்தும் பேசி பாராட்டினார்கள். ஜெயம் ரவி இன்னொரு சூப்பரான வேலையையும் செய்து விட்டு வெளியேறினார்.


Click it and Unblock the Notifications











