என்னது இன்னிக்கேவா...ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை : சிம்பு நடித்த அரசியல் த்ரில்லர் படமான மாநாடு கடந்த மாதம், ரம்ஜானை முன்னிட்டு ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
படத்தின் டீசர், பக்ரீத் பண்டிகையன்று நிச்சயம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் உறுதி அளித்துள்ளார். இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நடிகர் உதயாவும் டப்பிங் பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருவதாக தெரிவித்தார்.

தியேட்டரில் தான் ரிலீஸ்
படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதில் படக்குழு உறுதியாக உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் பற்றிய அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார்.

இன்று மாலை சிங்கிள் டீசர்
இதைத் தொடர்ந்து தற்போது, படத்தின் முதல் சிங்கிள் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படத்தின் ஹீரோ சிம்பு அறிவித்துள்ளார். இது சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறது.

மெஹரிஜில்லா போஸ்டர்
மெஹரிஜில்லா என பெயரிடப்பட்டுள்ள இந்த சிங்கிள் ரிலீஸ் பற்றி யுவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டர் சிம்புவும், கல்யாணி பிரியதர்ஷனும் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த சிம்பு படங்கள்
வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவும், அவரது ரசிகர்ளும் அதிகம் காத்திருப்பது மாநாடு படத்திற்காக தான். இதைத் தொடர்ந்து பத்து தல படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











