வாடகைத்தாய் தடை சட்டம் இந்தியாவில் உள்ளதே?.. கஸ்தூரி ட்வீட்

சென்னை: இந்தியாவில் வாடகைத்தாய் தடை இருக்கே என நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளனர்.

ட்விட்டரில் எதிர்வினை ஆற்றியவர்களுக்கு நான் சட்டம் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் கஸ்தூரி

 நயன் - விக்கி திருமணம்

நயன் - விக்கி திருமணம்

இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிலையில், அக்டோபர் 9ம் தேதியான இன்று இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஆகி உள்ளார் நயன்தாரா என்கிற அறிவிப்பை கணவர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

 பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்படி குழந்தை பிறந்தது என்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் நடிகர் கவின் மற்றும் தொகுப்பாளினி டிடி நீலகண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் உடனடியாக வாழ்த்து ட்வீட் போட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்.

 வாடகைத்தாய் தடை

வாடகைத்தாய் தடை

இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக தகுதில் இல்லாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

 குழப்பத்தில் நயன் ரசிகர்கள்! ரசிகர்கள்

குழப்பத்தில் நயன் ரசிகர்கள்! ரசிகர்கள்

ஒண்ணுமில்லை வாடகைத்தாய் பற்றி கஸ்தூரி தீவிரமாக ஆராய்ச்சி செய்றாங்க என சிலர் விமர்சிக்க, மேலும், சிலர் உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்றும், அப்போ நயன்தாரா வாடகைத்தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றார் என்று சொல்றீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 சூடு பிடித்த சட்ட வாதம்

சூடு பிடித்த சட்ட வாதம்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரே என ரசிகர்கள் சிலர் கமெண்ட் போட, அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி அது 2022 க்கு முன்பாக இப்போ எப்படி? என்கிற கேள்வியையும் கஸ்தூரி முன் வைக்க, மீண்டும் விவாதம் எழுந்தது.

 எச்சரித்த கஸ்தூரி

எச்சரித்த கஸ்தூரி

மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் என சொல்லும் சில பேருக்கு நான் ஒரு வழக்கறிஞர் அது எப்படி சட்டப்படி சரியா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்க விரும்புறது தப்பா? என மீண்டும் ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X