நமீதா மாரிமுத்துவுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் அனுமதிக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியை பாராட்டித் தள்ளினர்.
ஆனால், ஆரம்பத்திலேயே அவரை காரணம் ஏதும் சொல்லாமல் ரகசியமாக வெளியே அனுப்பி விட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுருதி நமீதா மாரிமுத்துவை சந்தித்து எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திருநங்கை போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை ஏகப்பட்ட புதிய முகங்களை போட்டியாளர்களாக விஜய் டிவி கொண்டு வந்தது. அதிலும், திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்கேற்றதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நல்ல முன்னெடுப்பு என பாராட்டினர்.

அதிரடி வெளியேற்றம்
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உச்சத்துக்கு சென்றாலும் அங்கேயும் ஏதோ ஒரு சமூக சிக்கல் மூன்றாம் பாலினத்தவருக்கு ஏற்படத்தான் செய்யும் என்பதை நிரூபிக்கும் விதமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனுக்கு முன்னதாகவே நமீதா மாரிமுத்து முதல் நபராக அதிரடியாக அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

என்ன பிரச்சனை
பிக் பாஸ் வீட்டில் என்ன சண்டை நடந்தாலும் அதை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடும் விஜய் டிவி நமீத மாரிமுத்து ஏன் வெளியேறினார் என்ன நடந்தது என்பதை ஒளிபரப்பவில்லை. அதற்கான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெளியே வந்த அவரும் எந்த மீடியாவுக்கும் பிக் பாஸ் தொடர்பாகவும் அந்த பிரச்சனை தொடர்பாகவும் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை.

ரீ-யூனியன்
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு மற்றும் சுருதி ஆகியோர் வெளியேறி உள்ளனர். பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியேறினாலே உடனடியாக ரீ-யூனியன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். ஆனால், இந்த முறை பலரும் ஒருத்தரை ஒருத்தர் நன்கு அறியாதவர்கள் என்பதால் அது போன்ற ரீ யூனியன் சந்திப்புகள் நடைபெறவில்லை.

நமீதாவை சந்தித்த சுருதி
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுருதி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய நமீதா மாரிமுத்துவை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நமீதாவுக்கு முத்தம்
அந்த வீடியோவில் சகோதரிகள் எனக் குறிப்பிடப்பட்டு நமீதா மாரிமுத்துவுக்கு சுருதி கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிகாட்டி உள்ளார். நமீதா மாரிமுத்து உண்மையிலேயே பிரச்சனை செய்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தால் இப்படி சுருதி அவரை நேரில் சந்தித்து இருப்பாரா? உண்மையை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மறைத்து வருகிறது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











