பாவனி காயினை ஏன் எடுக்கல? ஓப்பனாக சொன்ன சுருதி.. தாமரை தான் பிரச்சனைக்கு காரணமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், சுருதி பெரியசாமி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை நீடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சுருதி அந்த காயினை திருடியது தான் அவரது வெளியேற்றத்திற்கான காரணம் என்கிற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில், அதுகுறித்து வெளிப்படையாக சுருதி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார்.

ராஜு மீது என்ன கோபம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன நிலையில், கமல் முன்பாக நின்று கொண்டு ராஜுவுக்கு சுருதி சொன்ன வார்த்தைகள் தான் கடந்த வாரம் ஹவுஸ்மேட்களை அவருக்கு எதிராக திருப்ப காரணமாக அமைந்தது. இந்நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு ராஜு மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை அந்த நேரத்தில் அப்படி சொல்லத் தோன்றியது அதான் சொன்னேன் என சிம்பிளாக முடித்து சேஃ[ப் ஆகி விட்டார்.

அக்ஷராவுடன் என்ன பிரச்சனை
நீங்களும் அக்ஷராவும் ஒன்றாக இணைந்தே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தீங்க.. ஆனால், கடைசி வரை நீங்கள் இருவரும் நட்பு பாராட்டியது போலவே எங்களுக்கு தெரியவில்லையே ஏன்? என்கிற கேள்விக்கு அக்ஷரா அவருக்கு பிடித்த நபர்களிடமே பேசி வந்தார் என்றும் தன்னிடம் ஒரு டிஸ்டன்ட் மெயின்டெயின் செய்தார். பலமுறை அவரிடம் பேச முயற்சித்தும் முடியவில்லை என்று கூறினார் சுருதி.

அப்பா பெயர் ஏன்
பிக் பாஸ் வீட்டில் ஒரு கதை சொல்லட்டுமா சார் டாஸ்க்கின் போது அப்பாவை பிடிக்காது என்றும் அவர் மரணத்தின் போது சந்தோஷமடைந்தேன் என்றும் கூறிய நீங்கள் தொடர்ந்து சுருதி பெரியசாமி என்றே ஏன் உங்களை அடையாளப்படுத்தி வருகிறீர்கள் என்கிற கேள்விக்கு அப்பாவுக்குத் தான் என்னை பிடிக்காது. எனக்கு அப்பாவை பிடிக்கும் என அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு விட்டார்.

பாவனி காயினை ஏன் எடுக்கல
பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக நீங்கள் வெளியேற்றப்பட காரணமே தாமரை செல்வியின் காயினை திருடியதால் தான் என்கின்றனர். அதுவரை உங்கள் மேல் எந்தவொரு நெகட்டிவிட்டியும் ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. விக்கான போட்டியாளர் என்பதால் தான் தாமரையின் காயினை எடுத்தீங்களா? ஏன் பாவனியின் காயினை எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு அசால்ட்டா யார் வைத்தாலும் எடுத்து விடுவேன் எனக் கூறியிருந்தேன். தாமரை அசால்ட்டாக வைத்திருந்தார் அதனால் தான் எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

தாமரை பிரச்சனை பண்ணிட்டாங்க
நான் காயினை எடுத்து விட்டு வெளியே வந்த பின்னர் நீண்ட நேரம் பாவனி உள்ளே தான் இருந்தாங்க.. நான் காயினை எடுத்ததும் அவர் பார்த்து இருந்தால் அப்பவே கத்தியிருக்கலாம். ஆனால், அவங்க அதை பண்ணல. மேலும், பல முறை உடை மாற்றும் அரையில் சக பெண்கள் இருந்துள்ளனர். பெண்கள் உடை மாற்றும் அரையில் இருந்து கத்தினால் ஆண்கள் கண்டிப்பாக உள்ளே நுழைந்து இருக்க மாட்டார்கள். ஆனால், அப்படி தாமரை என் பக்கம் கத்தியை திருப்பியது தான் பிரச்சனைக்கு காரணம் என மனதில் பட்ட அனைத்தையும் பளிச்செனக் கூறியுள்ளார் சுருதி.

நேர்மையான எவிக்ஷனா
இவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது நேர்மையான எவிக்ஷன் என நினைக்கிறீங்களா? உங்களுக்கு பதிலாக யாரை எவிக்ட் செய்திருந்தார் சரியாக இருக்கும் என்கிற கேள்விக்கு சற்றுத் தயங்கிய படியே பதில் அளித்த சுருதி நேர்மையான எவிக்ஷன் இல்லை என்றே தான் நினைப்பதாகவும், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, மதுமிதா, அபிநய் சில நேரங்களில் இசைவாணி கூட இன்னும் சேஃப் கேம் ஆடுறாங்களோனு தோணுது என தனக்கு பதிலாக வெளியேற்ற 5 போட்டியாளர்கள் பெயரை கூறியுள்ளார் சுருதி.


Click it and Unblock the Notifications











