என்னது அபிநய் எஸ்கேப்பா? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தானாம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது சுருதி தான் என்கிற ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளது.

டஸ்க்கி மாடல் அழகியான சுருதி செம போல்டாக விளையாடி வந்த நிலையில், இந்த வாரம் அவர் வெளியேறி உள்ளது ரசிகர்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

கடந்த வாரம் அபிநய் மற்றும் வருண் கடைசி இடத்தில் இருந்த நிலையில் சுருதி எப்படி வெளியேறினார்? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சுருதி வெளியேற்றம்

சுருதி வெளியேற்றம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மாடல் அழகி சுருதி வெளியேறி உள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக இதுவரை விளையாடி வந்த சுருதியை திடீரென எவிக்ட் செய்திருப்பது ரசிகர்களை ரொம்பவே ஷாக்காக்கி உள்ளது.

போன வாரம்

போன வாரம்

ஒவ்வொரு வாரமும் எவிக்ட் ஆகும் நபருக்கு அடுத்தபடி குறைவான ஓட்டுக்களை பெற்று வந்த நபர்களே அடுத்தடுத்த வாரம் எவிக்ட் ஆகி வந்த நிலையில், சுருதியின் இந்த திடீர் எவிக்‌ஷனில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜெமினி பேரன் அபிநய்

ஜெமினி பேரன் அபிநய்

ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடந்த சினிமா சினிமா டாஸ்க்கில் தெய்வத் திருமகள் விக்ரம் போல நடித்து பாராட்டுக்களை அள்ளி இருந்தார் அபிநய். அதன் காரணமாக அவருக்கு ஓட்டுக்கள் அதிகரித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கமல் பார்த்த வேலையா

கமல் பார்த்த வேலையா

கடந்த வாரம் கமல் சார் அபிநய் மற்றும் வருணை தனியாக அழைத்து ஒழுங்கா விளையாடினால் தான் நிகழ்ச்சியில் நீடிக்க முடியும் என கொடுத்த டிப்ஸ் தான் இந்த வாரம் அந்த இருவரையும் எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றி உள்ளதாகவும் கமல் சொன்ன அட்வைஸை புரிந்து கொண்டு வருண் விளையாட்டை ஆரம்பித்துள்ளார். அபிநய்யும் விளையாடி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சுருதி ஏன்

சுருதி ஏன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக சுருதி வருவார் என அபிஷேக் ராஜா பேட்டி அளித்திருந்த நிலையில், சுருதி திடீரென வெளியேற அவர் தாமரை செல்வியின் காயினை திருடி விளையாடியது தான் காரணம் என்றும் தாமரைக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உள்ள நிலையில், வீக்கான போட்டியாளராக தாமரையை நினைத்து அவரை உடை மாற்றும் இடத்தில் திட்டமிட்டு ஏமாற்றி சுருதி காயினை எடுத்தது தான் அவர் இந்த வாரம் வெளியேற காரணம் என்றும் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழகாக உடை அணிந்து கொண்டு அட்டகாசமாக விளையாட வேண்டும் சும்மா இருக்கக் கூடாது என நினைத்து விளையாடி வரும் சுருதி ஏன் வெளியேற்றப்பட்டார். இது மிகவும் மோசமான எவிக்‌ஷன் மிக்சர் தின்னிகள் இன்னமும் பலர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், சுருதியை வெளியேற்றியது தவறான முடிவு என சுருதி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X