தாமரை செல்வியின் காற்று காயினை அபேஸ் பண்ண சுருதி.. இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு போட்டியாளர் வெளியேறி விட்டால் அந்த ஷோ ஒரு போதும் முடங்கியது கிடையாது.

ஓவியா, சுரேஷ் சக்கரவர்த்தி, நமீதா மாரிமுத்து என பலரையும் வெளியேற்றிய பின்னரும் ஷோவை வெற்றிகரமாக பிக் பாஸ் குழு நடத்தி வருகிறது.

அபிஷேக் வெளியேறி விட்டார் இனி கேம் சுவாரஸ்யம் இருக்காது என சிலர் நினைத்து இருக்கும் நேரத்தில் சுருதியை வைத்து கேமை சூடு பிடிக்க வைத்திருக்கிறது பிக் பாஸ் குழு.

ஸ்கோர் செய்யும் சுருதி

ஸ்கோர் செய்யும் சுருதி

தனது உடை அலங்காரத்தால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும் சுருதி அபிஷேக்கை மூடிட்டு உங்க வேலையை பாருங்க என மிரட்டலாக பேசி ஸ்கோர் செய்தார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சுருதி இசைவாணிக்கு ஆதரவாக அபிஷேக்கை வச்சு செய்து வெளியே அனுப்பிய சுருதி இந்த வாரமும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

செயலில் காட்டணும்

செயலில் காட்டணும்

அபிஷேக் மாதிரி சும்மா பேசி ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்காமல் அபிநய் மாதிரி அம்மாஞ்சியாக இருந்து காண்டாக்காமல் அக்‌ஷரா மற்றும் பாவனி போல அழுது புலம்பாமல் செயலில் இறங்கி கேம் ஆடணும் என்கிற வித்தையை நன்றாகவே செயல்படுத்தி வருகிறார் சுருதி.

தாமரை காயினை திருடிய சுருதி

தாமரை காயினை திருடிய சுருதி

மற்றவர்கள் மூலம் தனக்கு கிடைத்த காற்று காயினை தாமரை செல்வி காப்பாற்றிக் கொள்ளாமல் இருந்த நிலையில், சுருதி அதனை அழகாக அபேஸ் செய்யும் காட்சி இன்றைய முதல் புரமோவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. மற்ற நேரம் எல்லாம் கேம் ஆட தெரிந்த தாமரைக்கு தனக்கு ஒரு கஷ்டம் வந்தால் மட்டும் அழுது புலம்புவது ஏன் என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

துரோகம் செஞ்சிட்ட

துரோகம் செஞ்சிட்ட

ஏன் என் காயினை எடுத்த என சுருதியிடம் தாமரை கேட்க, இது கேம் இப்படித் தான் விளையாடணும் என சுருதி பதிலுக்கு பஞ்ச் கொடுக்க நீ எனக்கு துரோகம் செஞ்சிட்ட என தாமரை அழுது புலம்புவதை பாவமாய் பார்க்காமல் நீங்களும் திறமையா விளையாடுங்க தாமரை என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டம் இனிமே தான்

ஆட்டம் இனிமே தான்

நமீதா மாரிமுத்து வெளியேறிய பின்னர் பிக் பாஸ் முடிஞ்சுடுச்சு என்றார்கள், அபிஷேக்கை வெளியேற்றிய பின்னர் பிக் பாஸ் போர் என்றார்கள் ஆனால், இன்றைய புரமோவில் சுருதி இறங்கி ஆடியிருக்கும் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், இனி மற்ற போட்டியாளர்களும் காயினை திருட பார்ப்பார்கள். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா வளர்த்த அன்புக்கு பதிலாக பொறாமையும் போர் குணமும் தான் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X