ராஜுவின் முகத்திரையை கிழித்து விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுருதி.. எதுக்கு காயின்?
சென்னை: அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சுருதி பெரியசாமி இந்த வாரம் வெளியேறி விட்டார்.
ஆனால், கடைசி வரைக்கும் அந்த காயினை பயன்படுத்த அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
போகிற போக்கில் இதுதான் சரியான தருணம் என ராஜு ஜெயமோகனின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு சென்றுள்ளார் சுருதி.

வெளியேறினார் சுருதி
பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஞாயிறு எபிசோடில் வெளியேற்றப்பட்டார் சுருதி. தீபாவளி வாரம், கமல் பிறந்தநாள் என எந்தவொரு கருணையையும் காட்டாமல் சுருதி வெளியேற்றப்பட்டதற்கு பின்னணியிலும் ஏதாவது உள்குத்து இருக்குமோ? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதுவுக்கு காயின் கொடுத்தார்
அபிநய் மற்றும் சுருதி கடைசி இடத்தில் இருந்த நிலையில், இந்த முறையும் அபிநய் எஸ்கேப் ஆகி விட்டார். அவருக்கு பதிலாக சுருதியின் பெயரை கமல் சார் காட்டியதும் காயினை தான் பயன்படுத்த போவதில்லை என முடிவெடுத்த சுருதி அந்த காயின் மதுவுக்காவது பயன்படட்டும் என நினைத்து ஸ்பீக்கருக்கு பின்னால் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

காயினோடு வாங்க
ஆனால், பிக்பாஸ் அந்த காயினோடு பிக் பாஸ் வீட்டின் மெயின் டோர் வழியாக வெளியேறுங்கள் என சுருதிக்கு உத்தரவு போட மதுவிடம் கொடுத்த காயினை வாங்கிக் கொண்டு சுருதி வெளியேறும் போது பாவனி, நிரூப் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் அந்த காயினை பயன்படுத்து மீண்டும் வீட்டுக்கு வா என கெஞ்சினர்.

ராஜுவின் முகத்திரையை கிழித்து
ஹவுஸ்மேட்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய சுருதி ராஜு ஜெயமோகனிடம் சென்று நீங்க அப்படி பேசியிருக்கக் கூடாது. நீங்க பண்ண வேலையால் தான் நான் இப்போ வெளியே போறேன் என்பது போல பேசி ராஜு ஜெயமோகனின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு வெளியேறினார்.

என்ன பிரச்சனை
ராஜு ஜெயமோகனுக்கும் சுருதிக்கும் இடையே ஒரு பெரிய பனிப்போரே நிலவிக் கொண்டிருந்தது. கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் போது கூட ராஜு ஜெயமோகன் சும்மா இருக்கும் சுருதி என்றே அவரை குறிப்பிட்டு இருந்தார். தான் எடுத்துத் தந்த காயினை தாமரை செல்வியிடம் இருந்து திருடியதில் இருந்தே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சார்பாகவே ராஜு விளையாடுகிறார் என்பதை தான் சுருதி போகும் போது தெளிவுப்படுத்த விரும்பினார்.

வாய்ப்பு கொடுத்த கமல்
இந்த சீசனில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் யாருமே அகம் டிவி வழியாக போட்டியாளர்களை பார்த்து தங்களின் கருத்தை சொன்னது கிடையாது. இந்நிலையில், அந்த வாய்ப்பை சுருதிக்கு கமல் கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுருதி மீண்டும் ராஜுவை பங்கமாக வச்சு செய்தார். ராஜுவை மட்டுமின்றி அவருக்கு பிடிக்காத அக்ஷரா, இமான் அண்ணாச்சி, வருண் உள்ளிட்டோர் மீது குறை கூறிவிட்டு கிளம்பினார்.

காயின்
பிக் பாஸ் சுருதியின் காயினை எடுத்துக் கொண்டு வெளியே வர சொன்ன நிலையில், கடைசி வரை காயினை சுருதி கையில் வைத்துக் கொண்டு கமல் சார் முன்பாக காட்டியபடியே பேசியும் அவர் அதனை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. பிக் பாஸும் கடைசி வரை அந்த காயினை பற்றியே பேசவில்லை. தாமரையிடம் இருந்து திருடிய காயினோடே வெளியேறினார் சுருதி. அப்புறம் எதுக்கு பாஸ் அந்த காயின்? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











