3வது பைனலிஸ்ட்டான சரண்... உமாபதியை ஏமாற்றிய விஜி… சாதிக்கப்போது யார் ?

சென்னை : சர்வைவர் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முதல் இறுதிப்போட்டியாளராக விஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜிக்கு கொடுக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி வானேசாவை 2வது இறுதிப் போட்டியாளராக அறிவித்தார்.

இதையடுத்து, நடந்த போட்டியில் 3வது பைனலிஸ்ட்டாக சரண் தேர்வு செய்யப்பட்டார்.

18 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள்

விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், இனிகோ பிரபாகர், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்திரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட 18 பிரபலங்கள் சர்வைவர் போட்டியில் பங்கேற்றனர்.

வானேசா 2வது பைனலிஸ்ட்

வானேசா 2வது பைனலிஸ்ட்

இதில் முதல் 5 இடத்தை உமாபதி, சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வானேசா ஆகிய இடம் பிடித்தனர். 90 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில், இறுதி பைனலிஸ்ட்டுக்கான போட்டி நடந்தது. இதில் நீரின் மீது நிறுத்தப்பட்ட பிளாட்பார்மில் போட்டியின் இறுதிவரை நின்று முதல் பைனலிஸ்ட்டாக விஜயலட்சுமி வந்தார். இதையடுத்து, விஜிக்கு கொடுக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி, 2வது பைனலிஸ்ட்டாக வானேசாவை அழைத்து செல்வதாக விஜி கூறினார்.

தீ மூட்டும் டாஸ்க்

தீ மூட்டும் டாஸ்க்

அதனைத் தொடர்ந்து 3வது பைனலிஸ்ட்டிற்கான போட்டி நடைபெற்றது. கற்களைக்கொண்டு தீயை மூட்ட வேண்டும், தீ பற்றி எரியும் போது, சிவப்பு கொடி கட்டப்பட்ட கயிறு அறுந்து பின்னர் சிவப்பு கொடி ஏற்றப்படும். முதலில் யார் கொடி ஏற்றப்படுகிறதோ அவரே 3வது பைனஸிட்டாக தேர்வு செய்யப்படுவார் என அர்ஜூன் அறிவித்தார்.

வெற்றி பெற்ற சரண்

வெற்றி பெற்ற சரண்

இதற்கான போட்டியில் உமாபதி மற்றும் சரண் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் போது கையில் ரத்தம் வழிந்தபோதும் சரண் அதை மனதில் கொள்ளாமல் சுறுசுறுப்பாக தீயை மூட்டி முதலில் சிவப்பு கொடியை ஏற்றி 3வது பைனஸிட்டாக சரண் இடம் பிடித்தார்.

ஏமாற்றிய விஜி

ஏமாற்றிய விஜி

இந்த போட்டியில் தோல்வி அடைந்த உமாபதியிடம் அர்ஜூன் உ ண்மையில் நீங்கள் ஒரு சிறப்பாக விளையாடக்கூடிய நபர் ஆனால், நீங்கள் இன்று சிறப்பாக விளையாடவில்லை இதற்கு என்ன காரணம் என கேட்டார். இதற்கு பதிலளித்த உமாபதி, நேற்று கூட விஜி என்னைத்தான் 2வது பைனஸிட்டாக அழைத்து செல்வதாக கூறி இருந்தார்கள்.

வெளியேறிய உமாபதி

வெளியேறிய உமாபதி

ஆனால், திடீரென வானேசாவின் பெயரை கூறியதால் நான் மிகவும் குழம்பி விட்டேன், அதற்கு பிறகு என்னால் போட்டியில் கவனம் செலுத்த முடிவில்லை என்றார். இதையடுத்து, போட்டியிலிருந்து உமாபாதி வெளியேறி நடுவரானார். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு விஜயலட்சுமி,வானேசா மற்றும் சரண் 3 பேர் தேர்வாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X