சர்வைவர் தமிழ் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது.. இவர் தான் காதலராம்!

சென்னை: சர்வைவர் தமிழ் போட்டியாளர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஃபிட்னஸ் டிரைனராகவும் மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சர்வைவர் தமிழ் போட்டியாளர்

சர்வைவர் தமிழ் போட்டியாளர்

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. ஏகப்பட்ட நடிகர்களை வைத்து நடத்தப்பட்ட அந்த ஷோ எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக போகவில்லை. அதில், போட்டியாளராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஜீ தமிழில் மேலும், சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்து வருகிறார்.

ஐஸ்வர்யா கிருஷ்ணன்

ஐஸ்வர்யா கிருஷ்ணன்

துணிச்சல் மிக்க பெண்ணான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பல சினிமா பிரபலங்களுக்கும் ஃபிட்னஸ் டிரைனராக பயிற்சி அளித்து வந்தார். மாடலிங்கில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக அடிக்கடி போட்டோஷூட்களையும் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த அவருக்கு சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் தான் காதலர்

இவர் தான் காதலர்

இந்நிலையில், ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலர் இவர் தான் என ஹேண்ட்ஸம் ஆன அவருடன் பாய் ஃபிரெண்ட் உடன் எடுத்துக் கொண்ட சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் ரொம்பவே அழகா இருக்கீங்க, சூப்பர் ஜோடி பொருத்தம் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

காதலர் பிறந்தநாள்

காதலர் பிறந்தநாள்

ரெஸ்ட்ரண்ட் ஒன்றில் இருவரும் மிகவும் நெருக்கமாக தோள் மீது கை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். திடீரென என்ன ஸ்பெஷல் இப்படி காதலரை அறிமுகப்படுத்துறாரேன்னு பார்த்தால், அவருடைய பாய் ஃப்ரெண்டின் பிறந்தநாளாம், அதை அறிந்து கொண்ட ரசிகர்கள் பர்த்டே பேபிக்கு ஹேப்பி பர்த்டே வாழ்த்துக்களையும் சொல்லி வருகின்றனர்.

திருமணம் எப்போ

திருமணம் எப்போ

காதலரை அதற்குள் அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், விரைவில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? திருமணம் எப்போது? என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் எழுப்பி வருகின்றனர். சீக்கிரமே சந்தோஷமான செய்தியை ஐஸ்வர்யா கிருஷ்ணான் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சீசன் வருமா

அடுத்த சீசன் வருமா

பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனுக்கான புரமோவையே வெளியிட்டுள்ள நிலையில், ஜீ தமிழ் சர்வைவர் சீசன் 2 பற்றி இதுவரை எந்த மூச்சையும் விடவில்லையே என அதன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். முதல் சீசனே முழுவதும் செட்டப் செய்யப்பட்டு எடுக்கப்பட்டதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பிய நிலையில், இரண்டாவது சீசனை ஜீ தமிழ் கை விட்டு விட்டதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X