சர்வைவர் இறுதி போட்டி…. வெற்றியாளர் யாருனு தெரியுமா?.. கசிந்தது தகவல் !
சென்னை : சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான "சர்வைவர்" என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.
Recommended Video
90 நாட்களை எட்டி உள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட்டாக விஜி தேர்வு செய்யப்பட்டார்
மேலும், சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் விஜி என்ற தகவல் வெளியாகிஉள்ளது.

சர்வைவர்
இறுதியாக பைனலிஸ்ட்டுக்கான போட்டி நடந்தது. நீரின் மீது நிறுத்தப்பட்ட பிளாட்பார்மில் நான்கு எக்ஸ்ட்ரா பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு லெவல் முடியும் போதும் ஒரு பகுதியை நீங்கள் கழற்ற வேண்டும். கடைசியாக யார் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே வெற்றியாளர். அவரே இந்த கேமின் முதல் ஃபைனலிஸ்ட்.

ஃபைனலிஸ்ட்டிற்கான போட்டி
இந்த ஃபைனலிஸ்ட்டிற்கான போட்டியில்,விஜி, நாராயணன், வானேசா, உமாபதி, சரண் கலந்து கொண்டனர். நான்கு பகுதிகளைக் கொண்ட அந்த பிளாட்பார்மில் ஒருவர் நிற்பதே சிரமம் என்னும் போது ஒவ்வொரு பகுதியாக குறையும் சமயத்தில் கால் வைக்கும் பகுதி இன்னமும் குறைந்து கொண்டே வந்தது.

சவாலான டாஸ்க்
இதில், முன் பகுதி பிளாட்பார்மை அனைவரும் வெற்றிகரமாக ரிலீஸ் செய்தனர். இதனால் நிற்கும் பகுதி குறுகி கொண்டே சென்றது. 3 லெவல்களை வெற்றிகரமாக அனைத்துபேட்டியாளர்களும் செய்தனர். இது பார்ப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது.

வெளியேற்றப்பட்ட வானேசா
இறுதியாக நான்காவது லெவலுக்கான கவுன்ட்டவுனின் முதலில் நாராயணன் விழுந்தார். அடுத்து உமாபதி தண்ணீரில் விழுந்தார். வானேசாவின் பின் பகுதி பிளாட் பார்ம் கவுண்டன் நேரத்திற்குள் விழாததால் வானேசா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வெற்றியாளர் விஜயலட்சுமி
இதில் விஜயலட்சுமி, சரண் மற்றும் இறுதிவரை போட்டி ஆரம்பித்து எழுபது நிமிடங்கள் கடந்து சிங்க பெண்ணாக இறுதி போட்டிக்கு முதல் பைனலிஸ்ட்டாக விஜி தேர்வு செய்யப்பட்டார். மேலும், இந்த போட்டியின் வெற்றியாளர் என்ற தகவலும் கசிந்துள்ளது. அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் சர்வைவர் நிகழ்ச்சியின் இறுதி போட்டி தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications