லண்டன், சென்னை, குலுமணாலி அடுத்து டெல்லி: இது தான் சூர்யா 37 ஷூட்டிங் பிளான்

சூர்யா 37 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது

சென்னை: சூர்யா 37 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

நடிகர் சூர்யா இப்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா, மோகன்லால், சயிஷா, ஆர்யா, போமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Surya 37 shooting update!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. அதில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சயிஷா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டது.

இப்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் பல சிறப்பான விஷயங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய நட்சத்திரப்படமாக தயாராகிறது. அயன், மாற்றான் திரைப்படங்களுக்கு பிறகு கே. வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் இது. ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு மோகன்லால் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

சென்னையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு, குலுமணாலி மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளது.

லைகா புரடொக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X