twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சூரரைப் போற்று’.. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தலைப்பு வெளியானது!

    |

    Recommended Video

    Actor Suriya Movie First Look: சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று- வீடியோ

    சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ளது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள காப்பான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    Surya 38 is titled as Soorarai Pottru

    இப்படங்களைத் தொடர்ந்து, மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. கடந்த சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இப்படம் சூர்யாவின் 38வது படமாக உருவாகிறது.

    இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சூரரைப் போற்று எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய விமானத்தின் அடியில் வேட்டி சட்டையில் சூர்யா நிற்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    Actor Surya's 38th movie, directed by Sudha Khangora, dialogues written by Uriyadi Vijay Kumar is titled as Soorarai Pottru.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X