‘சூர்யா 40‘ ஃபர்ஸ்ட் லுக் குறித்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்ச்ர்ஸ் !
சென்னை : சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யா 40
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு சூர்யா 40 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இமான்
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ரத்னவேலு கவனித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி,இளவரசு, சுப்பு, பஞ்சு.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
இந்நிலையில்,சூர்யா 40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 22ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற தகவலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

46வது பிறந்த நாள்
நடிகர் சூர்யாவின் 46வது பிறந்த நாள் ஜூலை 23ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் கடந்த வாரமே காமன் டிபியை வெளியிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாடத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











