எஞ்சியுள்ள இறுதிக்கட்ட பணிகள்.. டிசம்பரில் படத்தை வெளியிட #சூர்யா40 படக்குழு திட்டம்

சென்னை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார்.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இம்மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்லபட்ட நிலையில் படக்குழு கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என முன்னரே கூறப்பட்டது.

சூர்யா - ஞானவேல்

சூர்யா - ஞானவேல்

இதற்கிடையில் சூர்யா கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரியா இருக்கும் புகைப்படம் வைரலானது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையாக வைத்து இந்த படம் தயாராகிறது. வக்கீலாக சூர்யா இந்த படத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள்

படப்பிடிப்பு பணிகள்

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நின்று போன படப்பிடிப்பு பணிகள் தற்போது மெல்ல மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன. கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாததால் நிலைமையை கருதி படக்குழுக்கள் படங்களை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

Recommended Video

தமிழக முதல்வருக்கு Actor Karthi வைத்த கோரிக்கை | Filmibeat Tamil
படப்பிடிப்பு தொடக்கம்

படப்பிடிப்பு தொடக்கம்

அதன் படி மீதமுள்ள #சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் சென்னையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருட டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தின் தலைப்பு ஜூலை 23ம் தேதி (சூர்யாவின் பிறந்தநாள்) அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X