ரெடி... ஆக்ஷன்... ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ள சூர்யா 40 சூட்டிங்
சென்னை : பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் சூர்யா 40 படத்தின் சூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
படத்தின் 35 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் பாண்டிராஜ் முன்னதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் ஜூலை 2வது வாரத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சி
நடிகர் சூர்யா தொடர்ந்து வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்.

ஜூலையில் மீண்டும் சூட்டிங்
வாடிவாசல் படத்தின் சூட்டிங் ஜூலை முதல்வாரத்தில் மீண்டும் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் சூர்யா 40 படத்தின் 35 சதவிகித சூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்துள்ளார்.

ஆழம் மிக்கதாக இருக்கும்
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தலைப்பு மிகுந்த ஆழம் மிக்கதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இமான் மியூசிக் அமைத்து வருகிறார்.

பிடித்தமான படமாக இருக்கும்
சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்தமானதாக அமையும் என்றும் பாண்டிராஜ் கூறியுள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுவரும் இந்த படம் சூர்யாவின் சகோதரர் கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் போல சூர்யாவிற்கு அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 2வது வாரத்தில் துவங்கும்
இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











