எஞ்சியுள்ள இறுதிகட்ட பணிகள்.. மீண்டும் தொடங்கவுள்ள #சூர்யா40 படப்பிடிப்பு!
சென்னை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் #சூர்யா40 என அழைக்கின்றனர்.
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இம்மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்லபட்ட நிலையில் படக்குழு கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என முன்னரே கூறப்பட்டது.

வைரலான படங்கள்
இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் #சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது. சூர்யா வாளுடன் உள்ள புகைப்படம் & துப்பாக்கி உடன் உள்ள புகைப்படம் என வெளியான 2 புகைப்படங்களும் வைரலானது.
Recommended Video

நாட்டை உலுக்கியது
அதனை தொடர்ந்து அண்மையில் #சூர்யா40 படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்தன. 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. அதனை மையமாக வைத்தே #சூர்யா40 படத்தின் கதை தயாராகியுள்ளது என பேசப்பட்டது.

படப்பிடிப்பு தொடக்கம்
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நின்று போன படப்பிடிப்பு பணிகள் தற்போது மெல்ல மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன. அதன் படி மீதமுள்ள #சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 12ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











