மீண்டும் தொடங்கும் சூர்யா 40 படப்பிடிப்பு... எப்போது தெரியுமா!

சென்னை : நடிகர் சூர்யா இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி வருவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ்

அனைத்து தரப்பு மக்களும் ரசிக்க கூடிய வகையில் தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் பாண்டிராஜ் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரின் படங்கள் குடும்ப பின்னணியில் எடுக்கப்படுவதால் மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்து கண்டு களிக்கின்றனர்.

பிரியா மோகன் ஹீரோயினாக

பிரியா மோகன் ஹீரோயினாக

இந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது சூர்யாவின் 40வது திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். அதையே ஃபார்முலாவில் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் டாக்டர் பட நடிகை பிரியா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ்,சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

முதல் முறையாக இணைகிறது

முதல் முறையாக இணைகிறது

சூரரைப் போற்றுக்கு பிறகு நவரசா மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்து வந்தாலும் அதற்கு முன்பாகவே சூர்யா 40 தயாராகிவிடும் என கூறப்படும் நிலையில் டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சூர்யா 40 மூலம் முதல் முறையாக சூர்யா, டி இமான் கூட்டணி இணைகிறது.

Recommended Video

Manimegalai, KPY Bala, Chaithra பற்றிய தெரியாத தகவல்கள்! | Thirumathi Selvam, Anchor
ஜூலை இரண்டாவது வாரத்தில்

ஜூலை இரண்டாவது வாரத்தில்

சூர்யா 40 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருவதால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ஜூலை இரண்டாவது வாரத்தில் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X