ஆயுத பூஜை விடுமுறையை குறிவைக்கும் சூர்யா41 படம்... கன்னியாகுமரியில் விறுவிறு சூட்டிங்!
சென்னை : நடிகர் சூர்யா -பாலா காம்பினேஷனில் 18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தொடர்ந்து சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவற்றில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசான நிலையில் எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

பாலா படத்தில் இணைந்த சூர்யா
இந்நிலையில் இந்தப் படங்களையடுத்து அவர் எந்தப் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் பாலாவின் சூர்யா41 படங்கள் அவர் கைவசம் இருந்த நிலையில் தற்போது பாலாவின் இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார்.

வாடிவாசல் டெஸ்ட் சூட்
முன்னதாக வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் சென்னையில் நடத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாவுடனான சூர்யா 41 படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

18 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது. இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆயுதபூஜை விடுமுறைக்கு ரிலீஸ்?
படத்தை ஒரேகட்டமாக முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் சூட்டிங்கில் கலந்துக் கொள்ள சூர்யா முடிவெடுத்துள்ளார். சூர்யா 41 படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தை ஆயுத பூஜையையொட்டிய விடுமுறையில் ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.

திரையரங்குகளில் ரிலீஸ்?
ஏற்கனவே செப்டம்பர் 30ல் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படைப்பான பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அந்தப் படத்துடன் இணைந்து சூர்யா41 படம் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. படம் முன்னதாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் படத்தின் டைட்டில்
படத்தின் டைட்டில் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் மிகுதியாக எதிர்பார்த்துள்ளனர். படத்தின் சூட்டிங் ஓரளவிற்கு நிறைவேறியுள்ள நிலையில் விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது நிறுவனத்தின் மூலம் சிறப்பான படங்களை சூர்யா தயாரித்துவரும் சூழலில் இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











