Kanguva - மலையூர் மம்பட்டியான் ரீமேக்.. சூர்யா 42 டைட்டில் கங்குவா ரஜினி பட டைட்டிலிலிருந்து உருவியதா?

சென்னை: Kanguva (கங்குவா) சூர்யா 42ஆவது படத்தின் டைட்டில் கங்குவா என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று காலை வெளியானது. டைட்டிலை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவரும் சூழலில் புதிய கேள்வியை எழுப்பிவருகின்றனர் சிலர்.

சூரரைப் போற்று படம் கொடுத்த பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு கதை தேர்வில் தெளிவாக இருக்கிறார் சூர்யா. அப்படி அவர் நடித்த ஜெய் பீம் படம் மெகா ஹிட்டானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக அக்கறையுள்ள படத்தில் சூர்யா நடித்ததால் அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்தன.

 Surya 42nd Movie Kanguva Title Is Taken from Rajini Movie Title Gangavaa?

வணங்கானிலிருந்து அவுட் சூர்யா 42 இன்: இதனையடுத்து வாடிவாசல், வணங்கான், சிவா இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக கமிட்டானார் சூர்யா. இதில் வணங்கானிலிருந்து திடீரென்று வெளியேற, வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டோடு நிற்க சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தினார் அவர். படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.

10 மொழிகளில் கங்குவா: படத்தின் ஷூட்டிங் நடந்தாலும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் பத்து மொழிகளில், 3டியில் படம் வெளியாகும் என்றும், இந்தப் படம்தான் சூர்யாவின் கேரியரில் பிரமாண்ட பட்ஜெட் படம் எனவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் படத்தின் பெயர் இன்று வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு கங்குவா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனம்: படத்தின் டைட்டில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. அதேசமயம் டைட்டில் டீசர் அட்டகாசமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துவரும் ரசிகர்கள் கங்குவாவுக்கு என்ன அர்த்தம் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியிருக்கின்றனர். அதன்படி கங்குவா என்றால் நெருப்பு போன்ற மனிதன் என்றும், அது தெலங்கானாவில் ஒரு சாதியின் பெயர் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

ரஜினி பட டைட்டிலா?: இந்நிலையில் கங்குவா டைட்டில் தொடர்பாக இன்னொரு தகவலையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர். அதாவது, ரஜினிகாந்த் கங்வா என்ற ஹிந்தி படத்தில் 1984ஆம் ஆண்டு நடித்திருந்தார். அது மலையூர் மம்பாட்டியான் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பகிரும் ரசிகர்கள், கங்வாவில் இருந்துதான் கங்குவா என டைட்டிலை மாற்றியிருக்கிறார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடி திஷா பதானி: இதற்கிடையே, சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானி கங்குவா படத்தில் நாயகியாக நடிக்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிஜு தீவு அல்லது மாலத்தீவுகளில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பாடல் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்டவற்றை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல் உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X