தப்பித்தவறி நடந்த "அந்த" விஷயம்.. எதிர்பார்க்கவே இல்லை.. சூர்யாவோடு மோதும் அஜித்.. ஆஹா ட்விஸ்ட்

சென்னை: நடிகர் அஜித் மற்றும் நடிகர் சூர்யா இடையில் தேவையில்லாத கிளாஷ் ஒன்று ஏற்பட போவதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடிப்பதாக இருந்தது. அவர் ஒரு பீல் குட் கதையையும் அஜித்துக்கு சொல்லி இருந்தார்.

ஆனால் கடைசியில் அந்த படம் செல்ப் எடுக்கவில்லை. இதற்கு காரணம் விஜய் நடிக்கும் லியோ. விஜயின் லியோ படம் முழு ஆக்சன் படமாக வர உள்ளது.

லியோ

லியோ

நடிகர் விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்தது. அங்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து சென்னைக்கு விஜய் - திரிஷா திரும்பி வந்துள்ளனர். சென்னையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளது. அங்கே இதற்காக செட் போடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. காஷ்மீரில் சண்டை காட்சிகள் சில இருந்தன. அந்த காட்சிகள் எல்லாம் நிறைவு அடைந்து உள்ளன. அதேபோல் சில ரொமான்ஸ் காட்சிகள், சேசிங் காட்சிகளும் இருந்துள்ளன. அந்த ஷூட்டிங் எல்லாம் மொத்தமாக முடிந்துள்ளன. இதையடுத்து சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடக்க உள்ளது.

 அஜித் ஆசை

அஜித் ஆசை

சென்னையில் பெரும்பாலும் சண்டை காட்சிகள், சேசிங் காட்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக வலுவான ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என்பது அஜித் ஆசை. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை ஆக்சன் கதை இல்லை என்பதால் இந்த படம் கைகூடவில்லை. இதையடுத்தே மகிழ் திருமேனியை வைத்து அஜித் நடிக்க உள்ளார். அவரிடம் கதையை கேட்கும் முன் ஏற்கனவே கொரியாவில் ஹிட் ஆன ஒரு படத்தை எடுத்து வெளியிடுங்கள் என்று கூறி உள்ளார் அஜித். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.

 கொரியா படம்

கொரியா படம்


இதற்காக கொரிய படத்தின் உரிமையும் பெறப்பட்டது. ஆனால் கடைசியில் மகிழ் திருமேனியோ.. இந்த கொரிய படத்தின் கதையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும்.அதற்கே நிறைய நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக என்னுடைய கதையையே செய்யலாம். அதையே படமாக எடுக்கலாம் என்று கூறி உள்ளார். இதையடுத்தே மீண்டும் மகிழ் திருமேனி தன்னுடைய கதையில் வேலை பார்க்க தொடங்கி உள்ளார். இப்படிப்பட்ட காரணங்களால் அஜித் - மகிழ் திருமேனி படம் இன்னும் தொடங்வில்லை. படம் தொடங்கி இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

அதன்பின் படம் இந்த வருடம் இறுதி வரை எடுக்கப்பட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும். இதனால் படம் கண்டிப்பாக லியோவுடன் மோதாது. மாறாக இந்த படம் சூர்யாவின் படத்துடன் மோத உள்ளது. சூர்யா - சிவா இணைந்து எடுக்கும் 10 மொழிகளில் தயாராகும் ஹை பட்ஜெட் படத்துடன் இந்த படம் மோதும் என்று கூறப்படுகிறது. தேவையில்லாமல் கதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அஜித் - சூர்யா படங்கள் கிளாஷ் அடிக்க உள்ளன. இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X