விக்ரம் மகனால் அசிங்கப்பட்ட பாலா.. சரியான நேரத்தில் கைகொடுக்கும் சூர்யா.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்!

நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குநர் பாலா இயக்க இருக்கிறார்.

Recommended Video

Actor Suriya Kaapaan Movie: சூர்யாவின் காப்பான் பட டீசரில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள்- வீடியோ

சென்னை: நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குநர் பாலா இயக்க இருக்கிறார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சேது, நந்தா, நான் கடவுள் என தமிழ் சினிமா வரலாற்றில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் பாலா. ஆனால், நடிகர் விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக வைத்து இவர் இயக்கிய வர்மாபடம் எதிர்பாராதவிதமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை பாலா சரியாக எடுக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனால் பாலாவிற்கு பதில் வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் அப்படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

தீவிர உழைப்பு

தீவிர உழைப்பு

தேசிய விருதுகள் வாங்கிய பாலாவுக்கு இந்த விவகாரம் பெரும் அவமானமாகி விட்டது. இதனால் தனது அடுத்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாகக் கொடுப்பதற்காக அவர் தீவிரமாக உழைத்து வருகிறார். இதற்காக அவர் ஒரு அட்டகாசமான கதையை தயார் செய்து விட்டாராம்.

ஓகே சொன்ன சூர்யா

ஓகே சொன்ன சூர்யா

அந்தக் கதையை சூர்யாவிடம் பாலா கூறியதாகத் தெரிகிறது. கதையைக் கேட்டு அசந்துபோன சூர்யாவும், உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை பாலா தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவாவுடன் ஒரு படம்

சிவாவுடன் ஒரு படம்

காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் பாலாவுடன் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

ஏற்கனவே, பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா' மற்றும் ‘பிதாமகன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் ஆனது. அப்படங்களின் மூலம் சூர்யாவிற்கும் நல்ல திறமையான நடிகர் என்ற பெயர் கிடைத்தது. எனவே, மூன்றாவது முறையாக பாலாவும், சூர்யாவும் அமைக்கும் இந்த கூட்டணி நிச்சயம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

யுவன் இசை

யுவன் இசை

இந்தப் படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுதவுள்ளதாகவும், யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X