பிட்னஸ் கோச்சுடன் புகைப்படம் வெளியிட்ட சூர்யா -ஜோ.. அழகோட ரகசியம் இவர்தானா?

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி பல ஆண்டுகளை கடந்தும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் அழகாக காணப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இவர்கள் அவ்வப்போது நடைபயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்து வெளியாகி வருகின்றன.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக இருந்து வருகிறார் சூர்யா. இவரது அடுத்தடுத்தப் படங்களின் வெற்றி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களின் பேவரிட்டாக மாறியுள்ளது.

சூர்யா -ஜோதிகா தம்பதி

சூர்யா -ஜோதிகா தம்பதி

40 வயதை கடந்த நிலையிலும் மிகவும் சிறப்பான பிட்னசுடன் காணப்படுகிறார் சூர்யா. இவருக்கு மட்டும் வயது ரிவர்ஸ் கியரில் போகுமோ என்று ரசிகர்கள் இவரை உச்சி முகர்ந்து வருகின்றனர். இவர் மட்டுமில்லாமல் இவரது காதல் மனைவி ஜோதிகாவும் இதில் சளைத்தவரில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

 ஜோதிகாவும் படங்களில் பிசி

ஜோதிகாவும் படங்களில் பிசி

இவரும் தன்னுடைய பங்கிற்கு பல படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி குழந்தைகள் பிறப்பு மற்றும் அவர்களது வளர்ப்பு என சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோ, மீண்டும் நடிக்கத் துவங்கியது அவரது ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காக மாறியுள்ளது.

பிட்னசில் அதிக கவனம்

பிட்னசில் அதிக கவனம்

இவர்கள் இருவரும் தங்களின் பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள புகைப்படம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

பிட்னஸ் கோச்சுடன் புகைப்படம்

பிட்னஸ் கோச்சுடன் புகைப்படம்

தங்களின் பிட்னஸ் கோச்சுடன் இவர்கள் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்களின் அழகு மற்றும் பிட்னசிற்கு இவர்தான் காரணமா என்றவகையில் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்கலாம், ஆனால் சுயமாக இதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X