சூப்பர் ஜோடி.. சுப்ரீம் செகண்ட் இன்னிங்ஸ்.. கலக்கும் சூர்யா, ஜோதிகா!
Recommended Video
சென்னை: நடிகர் சூர்யாவின் காப்பான் படம் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அயன் படம் பார்ட் 2 பார்த்த மாதிரி உற்சாகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள் என்று துவண்டு கிடந்தவர் நடிகர் சூர்யா. எனர்ஜி பூஸ்டாக வீட்டிலே ஜோ இருந்தும் கூட படங்கள் தொடர் தோல்வி என்றால் பொறுத்துக் கொள்ள முடியாதவர் சூர்யா.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இருந்தே இவருக்கு இறங்கு முக நிலைதான். இந்த நேரத்தில்தான் நேற்று வெளியான காப்பான் அவரை காப்பாற்றி இருக்கிறது.

ஒப்பந்தம் காப்பான்
காப்பான் படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்தே சூர்யா மகிழ்ச்சியில் இருந்ததாக ஜோ கூட சொல்லி இருக்கிறார். என்ன சொன்னாலும் சமாதானம் ஆகாத அவர், காப்பான் படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்துதான் சூர்யாவின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது என்றும் சொல்லி இருக்கார் ஜோ.

ஹிட் லிஸ்ட்
நேற்று வெளியான படத்தின் விமர்சனம் பார்த்தால் காப்பான் படம் ஹிட் என்றே தகவல்கள் தெரிய வருகின்றன. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த சூர்யா காப்பான் படத்தில் நடித்தார். சூர்யாவுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லலாம். இதை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேலே வர வேண்டும், தொடர் வெற்றிகளைத் தர வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்கள் ஆசை மட்டுமல்ல, அனைவரது ஆசையும் கூட. .

அடுத்து பேச்சு
நடிகர் சூர்யாவை நல்ல நடிகர்தான் என்று அடையாளம் காண்பித்தவர் நடிகை ஜோ தான். இருவரும் சேர்ந்து நடித்த முதல் படத்துக்குப் பிறகு சந்திச்சுக்கவே இல்லையாம். அந்த நேரத்தில் பக்கத்து பக்கத்து செட்டில் இருவரும் படம் நடித்துக்கொண்டு இருந்து இருக்கிறார்கள். அப்போது, உதவியாளரை விட்டு, சூர்யாவை அழைத்து வர சொல்லி இருக்கார் ஜோதிகா.

காண்பித்த ஜோ
ஏன் இப்படி இருக்கே.. நீ நல்ல நடிகனா வர கூடியவன். உனக்கு டான்ஸ் என்றாலும், ஒரு காட்சியில் நடிப்பது என்றாலும் உனக்குள் இருக்கும் தீ வெளியில் வரும்படியான வெறித்தனம் உன் நடிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னாராம். அதற்குப் பிறகுதான் சூர்யாவின் நடிப்பிலும், டான்சில் ஒரு சுறுசுறுப்பும் ஏற்பட்டது என்று பார்ப்பவர்களுக்கு தெரியும். சூர்யாவின் நடிப்பை ஜோவுக்கு முன் ஜோவுக்குப் பின் என்று கூட பிரிக்கலாம்.

திருமணத்துக்கு பின்னர்
திருமணத்துக்குப் பின்னர் குழந்தைகள் ஓரளவு பெரியவர்களானதும், முதலில் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஜோதிகா.அடுத்து 36 வயதினிலே...மகளிர் மட்டும் என்று அவர் நடித்த மூன்று படங்கள் ஹிட்..ஜோதிகாவைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பின்னர் அவர் நடிக்க வந்தது செகண்ட் இன்னிங்ஸ் என்று சொல்லலாம்.
சூர்யா ஜோதிகாவுக்கு செகண்ட் இன்னிங்க்ஸும் வெற்றிதான்.


Click it and Unblock the Notifications











