வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அகரம் ஃபவுன்டேஷன் சார்பாக 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை அளித்துள்ளனர்.

நடிகர் சிவகுமார் துவங்கிய அகரம் ஃபவுன்டேஷன் இன்று வரை சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அவருடைய வாரிசுகளான சூர்யாவும், கார்த்தியும் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள்.

Surya and Karthi given Rs.10 lakh donation flood Relief

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே, சில வருடங்களாகவே தொடர்ந்து சமூக பணிகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அந்த வகையில் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார் சூர்யா.

நடிகர் கார்த்தியும், விவசாய தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு அமைப்பு ஒன்றை துவங்கி உள்ளார். இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், சமூக பிரச்சனைகள் மற்றும் இயற்கை சீரழிவுகளுக்கும், தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.

அந்த வகையில் கேரளாவின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து அதன் விளைவாக கேரளாவில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நிலச்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் பலர் வீடு உடமைகளை இழந்துள்ளனர். அரசு தரப்பில் எத்தனை உதவிகள் செய்த பின்னும் பற்றாக்குறை நீடித்து கொண்டே போகிறது.

இதுவரை கேரளாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 102 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலர் மண் மூடிய வீடுகளில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மழை பாதித்த இடங்களை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி தொகையை அறிவித்ததோடு, மீட்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய சகோதரர் கார்த்தி ஆகிய இருவரும், முதல் ஆளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் கர்நாடகா மக்களுக்கு ருபாய் 10 லட்சம் உதவி தொகையை அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ராமாவரத்தில் உள்ள சூர்யா, கார்த்தி நற்பணி மன்றம் தினம் கூட்டம் கூடி பல விசயங்களை ஆலோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X