ஜெயிலர் படத்தில் பிசியான யோகிபாபு.. காத்திருக்கும் சூர்யா.. பாலா படத்தில் கவனம்?

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படம் முதல்கட்ட சூட்டிங்கை கோவாவில் நடத்தி முடித்துள்ளது.

தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இலங்கையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

அடுத்தடுத்த வெற்றியில் நடிகர் சூர்யா

அடுத்தடுத்த வெற்றியில் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளை சாத்தியமாக்கியுள்ளார். இந்தப் படங்களில் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சூர்யா, அடுத்ததாக சூர்யா 42 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட சூட்டிங் கோவாவில் நடந்து முடிந்துள்ளது.

பெயர் வைக்கப்படாத சூர்யா 42

பெயர் வைக்கப்படாத சூர்யா 42

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் இந்தப் படத்தில் சூர்யா மற்றும் திஷா பட்டானி இணைந்து நடித்த டூயட் பாடல் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் இலங்கையில் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

யோகிபாபு கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் சூர்யா

யோகிபாபு கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் சூர்யா

முன்னதாக வெளியான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரில் வரலாற்று பின்னணியில் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கேரக்டர்களில் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் யோகிபாபுவின் கால்ஷீட்டிற்காக படக்குழு தற்போது காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகிபாபு தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருவதால், சூர்யா 42 படத்தில் அவர் கால்ஷீட்டிற்காக படக்குழு காத்துள்ளது.

வணங்கான் படத்தில் சூர்யா கவனம்

வணங்கான் படத்தில் சூர்யா கவனம்

இந்தப் படத்தை அடுத்த ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டு சூட்டிங்கை துரிதப்படுத்தி வருகிறது. இதனிடையே தற்போது யோகிபாபுவிற்காக காத்திருக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பரில் படத்தின் சூட்டிங்கை துவக்க பாலா சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும தகவல்கள் தெரிவிக்கின்றன.

தள்ளிப் போன வணங்கான் சூட்டிங்

தள்ளிப் போன வணங்கான் சூட்டிங்

வணங்கான் படத்தின் சூட்டிங் முன்னதாக கன்னியாகுமரியில் 35 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில், படத்தின் சூட்டிங் கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனிடையே சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் சூர்யா பங்கேற்றதால் வணங்கான் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. தற்போது கிடைத்துள்ள கேப்பில் சூர்யா வணங்கான் படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X