தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளில் சூர்யா & வெற்றிமாறன்.. வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது!?
சென்னை: வாடிவாசல் எனும் நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல்.
Recommended Video
இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தை S. தாணு தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ள நிலையில் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனையடுத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

ப்ரீ ப்ரொடக்ஷன்
இது மட்டுமன்றி சூர்யா - சிவா கூட்டணியில் ஒரு படம் தயாராகவுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு சில நாட்கள் கிடப்பில் போடப்பட்ட போது இயக்குனர் சிவா சூர்யா நடிக்கவுள்ள படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கி செய்து வந்தார். அண்மையில் வெளியான தகவல் படி சோனி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் இந்த படம் வெளிவரவுள்ளது. இதற்கிடையில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்பில் வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். விடுதலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பரில் தொடக்கம்
விடுதலை படத்தின் பணிகளை முடித்த பின்னரே வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் என படத்தின் தயாரிப்பாளர்
S. தாணு உறுதியளிக்கிறார்.


Click it and Unblock the Notifications











