நான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா!

சென்னை : சூர்யா மற்றும் கார்த்தி என இருவரும் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

Recommended Video

Actor Shivakumar The Untold Story • Visual Artist, Orator | Filmibeat tamil

நிஜத்தில் அண்ணன் தம்பியாக இருக்கும் இவர்கள் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை.

இந்நிலையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் லிங்குசாமி சூர்யாவிடம் சுவாரசியமான கேள்வி ஒன்றைக் கேட்க அதற்கு அரங்கமே அதிரும் வகையில் சூர்யா அதிரடி பதில் அளித்துள்ளார்.

நட்சத்திரங்களாக ஜொலித்து

நட்சத்திரங்களாக ஜொலித்து

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி என இருவரும் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு வருகின்றனர்.

நம்பர் ஒன் நடிகராக

நம்பர் ஒன் நடிகராக

சூர்யா தனக்கென ஒரு பாணியை எடுத்துக் கொண்டு பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக்கொண்டு தொடர்ந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களையும் வித்தியாசமானதாக வேடங்களையும் ஏற்று நடித்து இப்பொழுதும் தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்தியிலும் ரீமேக்

ஹிந்தியிலும் ரீமேக்

அதேபோல் நடிகர் கார்த்தியும் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் மக்களை இன்றுவரை கவர்ந்து வருகிறார். அவ்வாறு இவரின் அதிரடியான நடிப்பில் சமீபத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

தெலுங்கிலும் வரவேற்பு

தெலுங்கிலும் வரவேற்பு

இவ்வாறு இருவரும் செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்க பேக் டு பேக் ஹிட்டுகளை கொடுத்து தமிழ் சினிமாவை அதிர வைத்து வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தியின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இவர்களது திரைப்படங்கள் ஓடுகிறதோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தெலுங்கிலும் இவர்கள் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் சக்கைபோடு போடுகிறது.

இருவரும் ஒரே திரைப்படத்தில்

இருவரும் ஒரே திரைப்படத்தில்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நட்சத்திரங்கள் தனித்தனியாக நடித்து வரும் நிலையில் இருவரும் ஒரே திரைப்படத்தில் எப்போது நடிப்பார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் சூர்யா உரையாடலில் தமிழ் ரசிகர்களின் மனதில் பல நாளாக இருக்கும் அந்தக் கேள்வியை லிங்குசாமி கேட்க அதற்கு நடிகர் சூர்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

ரொம்ப நாள் ஆசை

ரொம்ப நாள் ஆசை

அவ்விழாவில் இயக்குனர் லிங்குசாமி பல கேள்விகளை சூர்யாவிடம் கேட்க அதில் ஒன்றாக, நீங்களும் கார்த்தியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் யார் வில்லன்? யார் ஹீரோ? எனக் கேட்தற்கு, சூர்யா.. வீட்டில் நான்தான் சைலன்டானா வில்லன், கார்த்தி ரொம்ப நல்ல பையன் அப்பாவுக்கு செல்ல பையன். எனவே படத்திலாவது தான் ஒரு சைலன்டான வில்லனாகவும், கார்த்தி பட்டை எல்லாம் போட்டுக்கிட்டு நல்ல பையனா இருக்கணும். இப்படி ஒரு படம் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. மக்கள் மத்தியில் ஒரு இமேஜை மாற்ற ஆசை.

சூப்பர் காம்போவை

சூப்பர் காம்போவை

கார்த்தியும் தானும் இணைந்து நடிக்க முற்பட்டால் அந்த திரைப்படத்தில் தான் ஒரு வில்லனாகவும், கார்த்தி ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியுமாறு சூர்யா தெறிக்க அதற்கு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. எனவே தமிழ் ரசிகர்கள் பலரும் இந்த சூப்பர் காம்போவை விரைவில் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X