சூர்யா -பாலா படத்துல இணைஞ்சிருக்கறவங்கள பாருங்க... அப்ப அவங்க இல்லையா?
சென்னை : நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்காலிகமாக சூர்யா41 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது குமரியில் துவங்கியுள்ளது.

சூர்யா -பாலா கூட்டணி
நடிகர் சூர்யா 18 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தற்போது பாலா இயக்கத்தில் இணைந்துள்ளார். நந்தா, பிதாமகன் என்ற தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படங்களை கொடுத்த இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா தயாரிப்பு
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் அல்லது பாலாவின் படம் என எதில் அவர் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது பாலா படத்தின் சூட்டிங்கில் சூர்யா இன்றைய தினம் இணைந்துள்ளார்.

வாடிவாசல் டெஸ்ட் சூட்
முன்னதாக வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் சமீபத்தில் நடந்துள்ளது. பாலாவின் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா -பாலா காம்பினேஷனில் உருவாகும் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் குமரியில் துவங்கியுள்ளது.

படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி
மேலும் படத்தில் இணையவுள்ளவர்கள் குறித்தும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. படத்தில் ஜோதிகா சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக கூறப்பட்டதுபோல படத்தில் கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்
இதேபோல படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளராக பிரபல பாலசுப்ரமணியம், எடிட்டராக சதீஷ் சூர்யா மற்றும் ஆர்ட் டைரக்டராக மாயபாண்டி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இவர்களின் புகைப்படங்களை ஓவியங்களாக கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











