நான் கஞ்சா விற்கிறேனா.. நடிகை வனிதா மீது போலீஸில் புகார் அளித்த சூர்யாதேவி.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: தன்னைப்பற்றி அவதூறாக பேசி வருவதாக நடிகை வனிதா மீது சூர்யாதேவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் செய்தியில் அடிபட்டு வருகிறார். கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்தார்.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 23 வயதில் மூத்த மகனும் வயதுக்கு வந்த ஒரு மகள் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர்.

புகார்
இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் தன்னை விவாகரத்து செய்யாமல் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார்.

எலிசபெத்துக்கு ஆதரவு
இதனை தொடர்ந்து எலிசபெத்துக்கு ஆதரவாக யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி என்பவரும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் கருத்து தெரிவித்தனர். சூர்யாதேவி வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதனால் கடுப்பான வனிதா சூர்யா தேவி மற்றும் ரவீந்தர் மீது நேற்று முன்தினம் போலீஸில் புகார் அளித்தார்.

கஞ்சா விற்பனை
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, ரவீந்திரனெல்லாம் ஒரு ஆம்பளையா மனுஷனா என்றெல்லாம் கேட்டு திட்டி தீர்த்தார். மேலும் சூர்யா தேவி கஞ்சா விற்கிறார் என்றும் கஞ்சா விற்பதை தாண்டியும் பல தொழில் செய்கிறார், பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றார்.

அவதூறு பரப்புகிறார்
இந்நிலையில் வனிதா மீது வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார் சூர்யா தேவி. அதில் வனிதா அவதூறான வார்த்தைகளை பேசி, தனது மனதை புண்படுத்தியிருப்பதாகவும் தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











