வீடியோ வச்சு மிரட்டுறார்.. நாஞ்சில் விஜயனின் ரகசியங்களை அக்குவேறு ஆணிவேறாக உடைத்த சூர்யா தேவி!
சென்னை: யூடியூபர் சூர்யா தேவி, இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருநங்கை வைஷூ விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது சூர்யா தேவியின் இந்த திடீர் என்ட்ரி இணையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா தேவி: புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா தேவி, விஜய் டிவியில் காமெடி நடிகராக இருக்கும் நாஞ்சில் விஜயனுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு அவருடைய தங்கை கல்யாணத்துக்காக 2 லட்ச ரூபாய் பணத்தைக் கடனாகக் கொடுத்தேன். அந்த நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு என்னிடம் உதவியாகக் கேட்டதால் நான் கொடுத்தேன். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கும் அவருக்கும் எவ்வளவு பெரிய சண்டை, பிரச்சனை நடந்தது என்று உங்களுக்கே தெரியும். அப்போதே எனக்குப் பணம் தேவைப்படவில்லை என்பதால் நான் கேட்கவில்லை, சொன்னாலும் யாரும் நம்பவும் மாட்டார்கள் என்று விட்டுவிட்டேன். ஆனால், இப்போது நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஃபோன் செய்து என் பணத்தைத் திருப்பி கேட்டேன். ஆனால், தாரேன் தாரேன்னு இழுத்தடிக்கிறாரே தவிர இதுவரை ஒரு பைசா தரவில்லை.

வீடியோவை வைத்து மிரட்டல்: நான் தொடர்ந்து பணத்தைக் கேட்க ஆரம்பித்ததும், உடம்பு சரியில்லை, மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நாஞ்சில் சொன்னார். அதன் பிறகு, மதுரையில் நான் ஒரு எக்ஸ்போ போட்டிருக்கிறேன், அங்கே வா என்று வரவழைத்தார். நான் அங்குச் சென்று துணிகளை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்தபோது, பணம் வேண்டாம் நீ எடுத்துட்டுப் போ என்று என்னை அனுப்பி வைத்தார். ஆனால், நான் கிளம்பியதும் எனக்குப் பின்னாடியே ஆட்களை அனுப்பி, நான் பணம் கொடுக்காமல் துணிகளைத் திருடிக்கொண்டு ஓடிவந்தது போல ஒரு நாடகத்தை ஆடி, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வீடியோவைக் காட்டி என்னை மிரட்டுகிறார். நாஞ்சிலுக்கு எப்போதுமே இதே வேலைதான். பலருடைய தனிப்பட்ட மற்றும் ரகசிய வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்காட்டி பிளாக்மெயில் செய்வார்.
வாட்ஸ்அப் காலில் தான் பேசுவார்: வைஷூ பிரச்சனை செய்த போது, நாஞ்சில் எனக்குப் போன் செய்து, வைஷூவை எப்படியாவது ஆஃப் செய்ய வேண்டும், யாராவது ஆள் இருக்கிறார்களா?' என்று கேட்டார். அப்போது கூட நான் பாவப்பட்டு அவருக்கு ஒரு எண்ணை அனுப்பி வைத்து, இவர் உங்களுக்கு உதவி செய்வார் என்றேன். நாஞ்சில் விஜயன் சாதாரணமாக போன் காலில் பேசவே மாட்டார். போனிவ் ரெக்கார்ட் செய்து விடுவோமோ என்ற பயத்தில் எப்போதுமே வாட்ஸ்அப் காலில் மட்டும்தான் பேசுவார். வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவார். நான் இப்போ கஷ்டத்தில் இருப்பதால் நான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் அவர் திருப்பித் தந்தால் போதும். அதை சட்ட ரீதியாக வாங்குவதற்காகத்தான் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என்று சூர்யா தேவி ஆவேசமாகப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications