பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி!

By

சென்னை: தனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுக்கச் சொல்லி யூடியூப் பிரபலம் சூரியதேவி, பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட KPY Nanjil Vijayan

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

எலிசபெத் ஹெலன்

எலிசபெத் ஹெலன்

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். வனிதாவின் திருமணம் குறித்து சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அவர்களை கடுமையாகச் சாடிய வனிதா, சூரியாதேவி மீது போலீசில் புகார் கொடுத்தார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் வனிதா கூறியதை அடுத்து சூரியாதேவி கைது செய்யப்பட்டார். பின்னர் சூரியா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு குழந்தைகள் இருப்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார் நடிகை வனிதா.

நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன்

இந்நிலையில் அவருக்கும் அவரை விசாரித்த பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தாமல் தலைமறைவானார். இந்நிலையில் சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் நெருக்கமாக அமர்ந்து, மது அருந்துவது போன்ற புகைப்படத்தை நடிகை வனிதா வெளியிட்டார். இது பரபரப்பானது.

எஸ்.வி.சேகருக்கு கோரிக்கை

எஸ்.வி.சேகருக்கு கோரிக்கை

இந்நிலையில், தனக்கு முன் ஜாமின் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு நடிகர் எஸ்.வி.சேகருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் சூரியாதேவி. அதில் அவர் கூறியிருப்பதாவது: எஸ்.வி.சேகரண்ணா வணக்கம்.. நாம மீட் பண்ணியிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை ஆபாசமா பேசினேன்னு, எனக்கு தண்டனை கொடுத்தாங்க.. தண்டனை அனுபவிச்சுட்டு வந்த பிறகு நான் கையெழுத்து போட்டுட்டு இருக்கும்போதுதான் கோர்ட்ல உங்களை பார்த்தேன்.

சாதாரண பொண்ணு

சாதாரண பொண்ணு

அப்ப ஒரு வழக்குல உங்களுக்கு மட்டும் முன் ஜாமின் கொடுத்தாங்க. எனக்கு கொடுக்கல. என்னைய பெரிய லெவல்ல பிடிச்சுப் போட்டுட்டாங்க. நான் சாதாரண பொண்ணு.. இப்ப பாருங்க.. நீங்க ஒரு நாடகத்துல வனிதா அக்காவுக்கு மெட்டி போட்ட போட்டோவை பார்த்தேன். நீங்க செலபிரிட்டியா இருந்து போட்டோ எடுத்தா தப்பில்லையாம். நான், செலபிரிட்டியா இருந்த அந்த (நாஞ்சில் விஜயன்) பையன் கூட போட்டோ எடுத்தா, பெரிய தப்பு...

ஜூஸுன்னு தெரியலயாம்

ஜூஸுன்னு தெரியலயாம்

எங்க கையில இருக்கிறது ஜூஸுன்னு தெரியலயாம், சரக்குன்னு தெரியுதாம்.. எனக்கு அதுதான் ஒன்னும் புரியல. அவன் இமேஜை கூட ஸ்பாயில் பண்ணிட்டாங்க. இது எந்த விதத்துல நியாயம்? நீங்களே சொல்லுங்க. ஏன்னா, உங்களை நான் கோர்ட்ல பார்த்திருக்கேன். நீங்க வரும்போது 10, 15 வக்கீலோட வந்தீங்களா, அப்பவே எனக்குத் தெரியும் நீங்க பெரிய ஆளுன்னு.. எனக்கு முன் ஜாமின் வேணும்.. எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா, உங்களை என் அண்ணனா நினைச்சு கேட்கிறேன்.

வாசலை அடைச்சுட்டாங்க

வாசலை அடைச்சுட்டாங்க

பிளீஸ்ணா.. என்னால வீட்டுக்கும் போக முடியலை.. என் வீட்டைப் பார்த்தீங்கன்னா தெரியும். தமிழ்நாட்டுலேயே சூரியாதேவி வீட்டை மட்டும் வாசலையே அடைச்சுட்டாங்கண்ணா.. பார்த்தீங்களா, எவ்வளவு பெரிய கொரோனான்னு. என் வீட்டை எப்படி அடைச்சு வச்சிருக்காங்கன்னு பாருங்க.. எனக்கு முன் ஜாமின் வேணும்.. எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.. எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா.. இவ்வாறு சூரியாதேவி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X