சூரரைப்போற்று ரிலீஸ்.. சொன்னதை செய்தார் நடிகர் சூர்யா.. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி உதவி!
சென்னை: தமிழ் திரைப்பட சங்கங்களுக்கு நடிகர் சூர்யா ரூ.15 கோடி நிதி உதவி செய்துள்ளார்.
Recommended Video
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

நடிகர் சூர்யா முடிவு
இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும்
இந்த காலகட்டத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப்போற்று' திரைப்பட OTT வெளியீட்டுத்
தொகையிலிருந்து, தேவை உள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க நடிகர் சூர்யா முடிவு செய்திருக்கிறார்.

பெப்சிக்கு ரூ.1 கோடி
'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று அறிவித்திருந்தார். அதை உடனே செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. திரையுலகத்தின் தொழிலாளர் அமைப்பான 'பெப்சி' க்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

ஆர்.கே.செல்வமணி
இந்தத்தொகையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் 80 லட்ச ரூபாயும் பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்திற்கு என, இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்கள்.

தலைவர் பாரதிராஜா
நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் நாசர் அதைப் பெற்றுக்கொண்டார் அதை அவர், தற்போது நிர்வகித்து வரும் நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, நடிகர் சிவகுமார், 2D நிறுவன இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











