வில்லாதி வில்லனாக கலக்கிய சூர்யா.. '24' படம் வந்து 4 வருஷமாச்சு.. கொண்டாடும் ரசிகர்கள்!
வில்லாதி வில்லனாக கலக்கிய சூர்யா.. '24' படம் வந்து 4 வருஷமாச்சு.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சூர்யா வில்லனாகவும் கலக்கிய 24 படம் வெளி வந்து 4 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யாவே நடித்து தயாரித்த படம் 24. இந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி வெளியானது.
இதில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வில்லனாக..
டைம் ட்ராவல் குறித்த இப்படத்தில் நடிகர் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒருவர் வில்லன். 24 படத்தின் மூலம் வில்லனாகவும் கலக்கியிருந்தார் சூர்யா. அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

தேசிய விருதுகள்
24 படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் 2 தேசிய விருதுகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து எடிசன் விருதுகள், ஜீ சினிமாலு விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை குவித்தது.

கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்று 4 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதனை கொண்டாடி வருகின்றனர். டிவிட்டரில் #24TheMovie, #4YearsOfAwestruck24Movie என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகிறது.

டாப் ரேட்டிங்
அது சூர்யாவின் கனவு புராஜெக்ட்.. ஐஎம்பிடி ரேட்டிங்கில் 8 பெற்றது. இந்திய படங்களின் ஐஎம்பிடி பட்டியலில் டாப் ரேட்டிங் பெற்றது. சிறந்த கலை இயக்குநர், சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ், வில்லன் கதாப்பாத்திரத்திற்கான சிறந்த நடிப்புக்கான விருது என பல விருதுகளை குவித்துள்ளது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
Recommended Video

சூர்யாவின் சிறந்த படம்
சமீபத்திய ஆண்டுகளில் சூரியாவின் சிறந்த படம்.. பல தேசிய விருது மற்றும் பிலிம்பேர் வெற்றியாளர்.. உலகம் முழுக்க மொத்தம் 100 கோடி வசூல்.. விக்ரம் குமாரின் இப்படம் தனித்துவமான டைம் ட்ராவல், சிக்கலான திரைக்கதை மற்றும் அற்புதமான தயாரிப்பிற்காக விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











