அண்ணனுக்கு ஒரு நேஷனல் அவார்ட் பார்சல்.. தரமான சம்பவம் ஆன் த வே.. அதகளப்படுத்தும் சூர்யா ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இணையும் படத்தின் பெயர் வாடிவாசல் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யா ரசிகர்கள் அதனை படு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தின் ட்ரெயிலர் அண்மையில் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யாவின் 40வது படமான இந்தப்படத்திற்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

பெயரே தெறி காட்டுது

#வாடிவாசல.. பெயரே தெறி காட்டுது
அண்ணே வெற்றிமாறன்.. அண்ணே
சூர்யா வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.

கற்பனை செஞ்சு பாருங்க

வெற்றி மாறன் + சூர்யா அண்ணா காம்போ கற்பனை செஞ்சு பாருங்க.. வாடிவாசல்.. என்று கூறுகிறார் இவர்.

காத்திருக்க முடியவில்லை

மதுரை ஸ்லாங் டயலாக்குகள் புத்தகத்திலேயே அதிகம் ஒளிர்கின்றன (நான் படிச்ச வரைக்கும்) சரியான மதுரை ஸ்லாங்கில் சூரியா அண்ணா பேசுவதைக் காண காத்திருக்க முடியவில்லை. உற்சாகமாக உள்ளது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தெறிக்க விட்டுறுச்சு

வாவ்.. தலைப்பே தெறிக்க விட்றுச்சு.. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இது அல்லவா தலைப்பு..

அட அட இது அல்லவா தலைப்பு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நம்ம குறி மிஸ்ஸாகாது

வாடிவாசல் நம்ம குறி மிஸ் ஆகாது என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

வேற லெவல்ல இருக்கும்

வாடிவாசல் மூவிய பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணா வேற லெவல்ல இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.

தரமான சம்பவம்

சூர்யா 40 வரை காத்திருக்க முடியாது..
தரமான சம்பவம் ஆன் தி வே.. கொல மாஸ் காம்போ என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

நேஷனல் அவார்ட் பார்சல்

அண்ணனுக்கு ஒரு நேஷனல் அவார்ட் பார்சல்.. என்று இப்போதே கூறிவிட்டார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X