கெளதம் ஓகே சொன்னா மறுபடியும் கிட்டார் எடுக்க சூர்யா தயாராம்.. வாரணம் ஆயிரம் 2 ரெடியாகுதா?
சென்னை: சூர்யா - கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் உருவாகும் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
கெளதம் மேனனின் காக்க காக்க படம் தான் சூர்யாவை மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றியது.
அதனை தொடர்ந்து மீண்டும் சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான வாரணம் ஆயிரம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், மீண்டும் கிட்டாரை எடுக்க சூர்யா ரெடியாகி வருகிறாராம்.

வாரணம் ஆயிரம்
கடந்த 2008ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படம் வித்தியாசமான சூர்யாவை தமிழக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஒரே படத்தில் தந்தை, மகன், இளைஞன், டிரக் அடிக்ட், ராணுவ வீரன், வயதான ரோல் என பல வேடங்களில் நடித்து சூர்யா அசத்தியிருந்தார்.

சிக்ஸ் பேக்
மேலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா நடிகர்கள் மத்தியில் சிக்ஸ் பேக் உடலமைப்பை அறிமுகப்படுத்தியதும் வாரணம் ஆயிரம் படம் தான். இந்த படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடித்ததை படத்தின் காட்சியாக வைத்து கெளதம் மேனன் உடற்பயிற்சி செய்வதின் பலனை இளைஞர்களுக்கு எடுத்துரைத்திருந்தார்.

அந்த கிட்டார்
ரயிலில் சமீரா ரெட்டியை பார்த்ததும் கிட்டார் எடுத்து நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை என வாசிக்கும் சூர்யா, அதே கிட்டாருடன் அமெரிக்காவில் மேக்னா கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமீரா ரெட்டியை தேடி அலைந்து கண்டு பிடிக்கும் காட்சிகள் கவித்துவமானது.
Hope this magical duo reunites again! — Rajasekar (@sekartweets) February 1, 2020 '>
மீண்டும் கிட்டார்
இந்நிலையில், கெளதம் மேனன் எப்போது கிட்டாரை எடுக்க சொன்னாலும் நான் ரெடி என சூர்யா சொல்லி இருப்பதாகவும், யெஸ்.. நான் உங்களை கிட்டாரை எடுக்க சொல்லப் போறேன் என கெளதம் மேனன் கூறுவது போலவும் விமர்சகர் மற்றும் ஃபிலிம் கலெஸ்பான்டென்ட் ராஜசேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

வாரணம் ஆயிரம் 2
துருவ நட்சத்திரம் கதையில் சூர்யா நடிக்க சம்மதித்து, பின்னர் முழு கதை தனக்கு சொல்லவில்லை என அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் வெற்றிக் கூட்டணியான சூர்யா - கெளதம் மேனன் காம்பினேஷன் மீண்டும் இணையவில்லை. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள பேச்சு வாரணம் ஆயிரம் 2ம் பாகத்திற்கு அடி போடுவதாக அமைந்துள்ளது.
Recommended Video
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ராஜசேகரின் அந்த ட்வீட்டுக்கு கீழே சூர்யா ரசிகர்கள் மீண்டும் வாரணம் ஆயிரம் போன்ற ஒரு படம் வந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











