ரத்தம் தெறிக்க தெறிக்க... விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர்.... லீக்கான ஆடியோ!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இன்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வெயிட்டான கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமான வகையில் சென்னையில் நடைபெறவுள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

3 ஆண்டுகளுக்கு பிறகு உலகநாயகன் கமலை திரையரங்குகளில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்களும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேமியோ ரோலில் சூர்யா

கேமியோ ரோலில் சூர்யா

இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களுடன் நடிகர் சூர்யாவும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் இவரது கேமியோ கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் படத்தில் இவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.

சூர்யா குறித்த ஆடியோ

சூர்யா குறித்த ஆடியோ

இதனிடையே சூர்யாவின் கேரக்டர் குறித்த ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில் ரசிகர் ஒருவர் சூட்டிங் பார்க்க சென்றதாகவும் படத்தின் சூட்டிங்கில் சூர்யா வெள்ளை நிற சட்டையில் ரத்தம் தெறிக்க தெறிக்க காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கையில் அரிவாளுடன் சூர்யா

கையில் அரிவாளுடன் சூர்யா

கையில் அரிவாளுடன் அவர் மேஜையில் அடிப்பதாகவும் மிகவும் ஆக்ரோஷமாக அவர் காணப்பட்டதாகவும் மேலும் அந்த ரசிகர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். தன்னுடைய நண்பரிடம் சூட்டிங் அனுபவம் குறித்து தொலைபேசியில் அவர் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சூர்யா எப்போதுமே தனது கேரக்டருக்காக மிகவும் மெனக்கெடுவார். இந்நிலையில் கமலின் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் சூர்யாவின் கேரக்டர் குறித்து தற்போது இந்த ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X