twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூரிய கிரகணத்தில் பிறந்த மிருக குழந்தை அம்புலி !

    |

    சென்னை : 26டிசம்பர் 2019 ஆன இன்று சூரிய கிரகணம் தமிழகம் மற்றும் புதுவையில் மக்கள் ஆச்சரியத்துடன் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

    இதற்காக பூங்காக்கள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் பிரத்தியேக கண்ணாடிகள் தொலைநோக்கு உபகரணங்கள் வைக்கப்படட்டு அதன் மூலம் மக்கள் சூரிய கிரகணத்தை பார்த்து வருகின்றனர் .ஆராய்ச்சியாளர்கள் கூறுவது வெறும் கண்ணில்சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் மற்றும் கர்பிணிப் பெண்கள் சூரிய கிரகணமான இன்று வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் .

    surya grahanam movie ambuli

    சூரிய கிரகணத்தை பற்றி பல கதைகளும் கட்டுகதைகளும் மக்களிடையே இருக்கின்றன. அதனை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை மைய்யமாக வைத்து எடுக்க பட்ட சிறந்த த்ரில்லர் படம் தான் அம்புலி 3டி .2012 ஆம் ஆண்டு ஹரி சங்கர் மற்றும் ஹரீஸ் நாராயணன் ஆகியோரால் எடுக்கபட்ட இந்த படம் மக்களிடையே நல்ல வெற்றியை பெற்றது .

    ஆங்கில சினிமாக்கள் முக்கியமாக அமெரிக்காவில் வெளியாகும் பல சினிமாக்கள் உலகம் முழுவதும் வெற்றி அடைய காரணம் ,அதில் பல படங்கள் அட்வஞ்சர் அஃதாவது சாகசம் திகில் நிரைந்த திரைப்படங்களாக தான் இருக்கும் அந்த மாதிரியான திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிகக்குறைவு அப்படி வந்த திரைப்படங்களும் மனதில் நிக்காத திரைப்படங்களாக தான் வரலாற்றில் இருக்கின்றன.

    surya grahanam movie ambuli

    இந்த த்ரில்லர் ,திகில் மற்றும் சாகசம் நிறைந்த திரைப்படமாக உருவானது தான் அம்புலி ,அம்புலி ஒரு குறுகிய பொருட்செலவில் உருவாக்க பட்டதால் இந்த படம் பலரால் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது .ஆனால் இதே திரைக்கதையை தனியாக எடுத்து பார்த்தால் இது ஹாலிவுட்டுக்கு நிகரான ஒரு படம் தான் .இங்கு உள்ள நம்பிகைகளை கையில் எடுத்து அதன் மீது ஒரு கதை எழுதி அதற்கு சிறந்த திரைக்கதை எழுதி படமாக்கியதே இந்த படத்தின் சிறப்பு .

    அம்புலி - ஒரு ஆங்கிலேய ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சியில் 150வருடம் மனிதனை வாழ வைக்கும் முயற்சியில் ஒரு பெண் மீது ஆராய்ச்சி நடக்கிறது ,சூரிய கிரகணம் அன்று அந்த கர்பிணிப் பெண் வெளியே வர .அவளுக்கு பிறக்கும் குழந்தை கொடூர மிருகமாக பிறக்கிறது ,அது பகலில் பதுங்கி இரவில் வேட்டையாடுகிறது .அந்த மிருகத்தை கண்டு அஞ்சி ஊர் மக்கள் வேறு இடம் நோக்கி நகர்கின்றனர் .இதை பல வருடங்கள் கழித்து சில இளைஞ்ரகள் சேர்ந்து அது என்ன வென்று ஆராய்ச்சி செய்கின்றனர் இறுதியில் பல போராட்டத்திற்கு பிறகு அந்த அம்புலியை பிடித்து ராணுவத்திடம் ஒப்படைகின்றனர் .இது தான் அம்புலி கதை.

    surya grahanam movie ambuli

    சூரிய கிரகணத்தின் ஓர் நம்பிகையை அடிப்படையாய் கொண்டு உருவாக்கபட்ட இந்த படம் மக்களிடமும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது .முக்கியமாக இந்த படம் 70களின் இறுதியில் எடுக்கபட்டது போல் படமாக்கபட்டு இருக்கும் .இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் குறைவு தான் அதுவும் அந்த படங்கள் எல்லாம் கடவுள் படங்களாக எடுக்க பட்டிருக்கும் அது வேறு மாதிரயான திரைக்கதையை கொண்டு இருக்கும் அதற்கு நேர்எதிராக சாகச படமாக எடுக்க பட்டது தான் அம்புலி படத்தின் வெற்றியாக பார்க்கபடுகிறது .அது தான் உச்சகட்ட சுவாரஸ்யத்தை கொடுத்து மக்களை அடுத்து என்ன அடுத்து என்ன என்று சீட்டின் நுனிக்கு தள்ளியது .

    அம்புலி படத்தை போல த்ரில்லர் படம் குறைவு என்றாலும் வேறு ஒரு கற்பனை கோனத்தில் எடுக்கபட்ட மர்ம தேசம் நாடகத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம் .மர்ம தேசம் கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்து அன்றைய மக்களை பீதியில் உரைய வைத்த ஒரு நாடகம் .இப்படி பட்ட படங்களை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர் ஆனால் இதை போல ஜானர்களை தொட இயக்குனர்கள் தொடர்ந்து தயங்கியே வருகின்றனர் .இப்படி பட்ட படங்கள் வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு .

    Read more about: ambuli அம்புலி
    English summary
    ambuli is a movie about surya grahanam released in tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X