சூர்யா, சிநேகா, தனுஷ் இவங்க எல்லாம் ஏன் கோபப்படுறாங்க?
சினிமா தலைப்புகள் சில நேரங்களில் பஞ்சாயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். பிரபலமானவர்களின் பெயர்களை சினிமாவிற்கு வைத்தால் படம் பிய்த்துக் கொண்டு போகும் என்று நம்பும் சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவசரம் அவரசமாக படத்திற்கு தலைப்பு வைத்து மாட்டிக்கொள்கின்றனர்.
இப்போது மூன்று படங்கள் இதுபோல தலைப்புச் சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டனவாம் சூர்யா, சிநேகா, தனுஷ் ஆகியோரின் பெயர்களில் படத்திற்கு தலைப்பு வைத்து எதிர்ப்பை சம்பாதித்து கொண்டுள்ளனராம்.
இப்படி தலைப்பு வைப்பது விளம்பர யுக்திதான் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

சூர்யாவின் கோபம்
‘சரவணன் என்கிற சூர்யா என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. ராஜா சுப்பையா இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். ‘பலரின் கவனத்தை கவரும் என்பதற்காக தயாரிப்பாளர் இந்த படத்திற்கு இப்படி ஒரு பெயரை வைத்தாராம். இது சூர்யாவை கோபப்படுத்தியிருக்கிறது.

பேரழகிக்கா காத்திருப்பு
சரவணன் என்ற சாதாரண இளைஞன் தன்னை நடிகர் சூர்யா என்ற உயர்வு மனப்பான்மையில் நினைத்து வாழ்கிறான். அந்த நினைப்பிலேயே வாழும் அவன், தன்னை விரும்பும் சாதாரண பெண்களை நிராகரிக்கிறான். இதயம் கவர்கிற மாதிரி பேரழகி வேண்டும் என்று காத்திருக்கிறான். அவன் இதயம் கவர்ந்த பேரழகியை மணந்தானா, இல்லையா? என்பதே கதை.

ஒரிஜினல் சூர்யா
சூர்யாவின் ஒரிஜினல் பெயர் சரவணன். அதையே பட தலைப்பாக வைத்திருப்பதை அறிந்து சூர்யா அதிர்ச்சியடைந்து விட்டாராம். தனது பெயரை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருப்பது சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். பட தயாரிப்பாளரை தொடர்புகொண்டு பட டைட்டிலை மாற்றி வைக்கும்படி சூர்யா கேட்டாராம்.

மாற்ற முடியாது
படத்தின் தலைப்பை மாற்றுவது என்பது படத்தையே கைவிடுவதற்கு சமமாகிவிடும். தற்போது வைத்துள்ள டைட்டில்தான் படத்திற்கு பொருத்தமானது எனவே டைட்டிலை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டாராம் ராஜா சுப்பையா.

சிநேகா கொதிப்பு
'சிநேகாவின் காதலர்கள்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில், ஒரிஜினல் சிநேகாவே சில காட்சிகளில் நடிக்கிறார் என ஆரம்பத்தில் அள்ளிவிட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தனுஷ் விளக்கம்
அதற்குப் பிறகு 'தனுஷ் 5-ம் வகுப்பு' என்றொரு படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று தனுஷ் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு தலைப்பு விவகாரமானது.

இப்படி ஆயிப்போச்சே
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதை தான் அந்தப் படத்திற்கான விளம்பரமாக இருக்கும். பின்னர், பிரபலமான நடிகர், நடிகைகளைக் காட்டி தியேட்டருக்கு வரவழைத்தார்கள். ஆனால், 'எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்' என்ற கதையாக நாளுக்கு நாள் தள்ளாட்டத்திலேயே தத்தளிக்கிறது தமிழ் சினிமா. அதனால் கதைக்கு மட்டுமல்ல தலைப்புக்கு கூட தள்ளாடும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா.


Click it and Unblock the Notifications











