»   »  வெற்றிகரமாக 9 வது "திருமண ஆண்டில்" அடியெடுத்து வைத்த "சூர்யா - ஜோதிகா" தம்பதி

வெற்றிகரமாக 9 வது "திருமண ஆண்டில்" அடியெடுத்து வைத்த "சூர்யா - ஜோதிகா" தம்பதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியினர் வெற்றிகரமாக இன்று தங்களது 9 வது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

கடந்த 2006 ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா, தற்போது இந்தத் தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு காலையில் இருந்தே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன.

பூவெல்லாம் கேட்டுப் பார்

பூவெல்லாம் கேட்டுப் பார்

பூவெல்லாம் கேட்டுப் பார் திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா - ஜோதிகா பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

காக்க காக்க

காக்க காக்க

காக்க காக்க திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது, இதனை இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தனர். பல பத்திரிக்கைகளில் செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வந்தபோதும் இருவரும் தங்களுக்கிடையே எதுவும் இல்லை என்றே கூறினார்.

2006 ல்

2006 ல்

பின்னர் இருவரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தொடங்க கடைசியில் ஜோதிகா முதன்முறையாக தங்கள் காதல் குறித்து ஊடகங்கள் முன்னிலையில் மனந்திறந்து கூறினார். 2006 ல் சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு விமரிசையான முறையில் திருமணம் நடந்தது.

2 குழந்தைகள்

2 குழந்தைகள்

இவர்கள் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர், திருமணத்திற்குப் பின்பு சுமார் 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோதிகா.

9 வது வருடம்

9 வது வருடம்

சூர்யா - ஜோதிகா தம்பதியினர் இன்று வெற்றிகரமாக தங்களது 9 வது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று போல் என்றும் வாழ்க...

English summary
Actor Surya and Jyothika Celebrates Their 9th Wedding Anniversary Today, Married on September 11th 2006.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil