Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தேசிய விருது விழாவில் முதன்முறை..ஜோடியாக விருது வாங்கிய சூர்யா-ஜோதிகா..விழாவில் சிறப்பான சம்பவம்
சூரரைப்போற்றுக்கு விருது பட்டியலில் 6 விருதுகளில் 2 விருதுகளை சூர்யா-ஜோதிகா தனித்தனியாக பெற்றதன் மூலம் முதன் முறை ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
தேசிய விருது வழங்கும் விழாவில் ஒரே படத்துக்கான இரண்டு வெவ்வேறு விருதுகளை சூர்யா-ஜோதிகா தனித்தனியாக பெற்றனர்.
தேசிய விருது பெறுவது திரைக்கலைஞர்களின் கனவு. கணவன், மனைவியாக சேர்ந்து விருது வாங்குவது மிகப்பெரிய சம்பவம். அது சூர்யா ஜோதிகா வாழ்வில் நடந்துள்ளது.
National
Awards
2022:
ஜோதிகாவை
தேசிய
விருது
வாங்க
வைத்த
சூர்யா…
செல்போனில்
வீடியோ
எடுத்து
மகிழ்ச்சி

97 ஆம் ஆண்டு அறிமுகம்.. 25 ஆண்டுகளில் தேசிய விருது
நடிகர் சூர்யா 90 களின் பிற்பகுதியில் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் அவர் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில் திடீரென பாலாவின் நந்தா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விஸ்வரூபம் எடுத்தார். அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான நடிப்பை காட்டிய அவர் காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், கஜினி, சிங்கம் என பல வித்தியாசமான வேடங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த நேரத்தில் தன்னுடன் நடித்த ஜோதிகாவை 2006 ஆம் ஆண்டு கரம் பிடித்தார். 25 ஆண்டுகளில் தேசிய விருது நோக்கி நகர்ந்துள்ளார்.

குழந்தைகள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தும் சூர்யா-ஜோதிகா தம்பதி
சூர்யா ஜோதிகா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து 2-டி என்கிற பட நிறுவனந்த்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட படம் தான் சூரரைப்போற்று. உண்மைச் சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் முதன் முதலாக ஓடிடி தளத்தில் வெளியான படமாகும். இப்படம் பெருத்த வரவேற்பை பெற்ற நிலையில் ஜெய் பீம் படத்தையும் எடுத்தார். அதுவும் சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது.

இளம் தம்பதி தேசிய விருது இருவரும் பெறுவது முதல்முறை
இந்நிலையில் சூரரைப்போற்று படத்திற்கு 68 வது தேசிய திரைப்பட விருதில் 6 விருதுகள் கிடைத்தது. சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த ஸ்க்ரீன்பிளே, சிறந்த பின்னணி இசை என 6 விருதுகள். இதில் சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த படத்துக்கான தயாரிப்பாளர் என்கிற முறையில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் விருது பெற்றனர். இது தேசிய விருது நிகழ்வில் முதன்முறையாக இருக்கலாம். இளம் தம்பதி இருவரும் ஒரே மேடையில் தனித்தனியாக தேசிய விருது பெருவதை அங்குள்ளவர்கள் பெரிதாக வரவேற்றனர்.

ரஜினி தனுஷ்- சூர்யா- ஜோதிகா ஒரே குடும்பத்தில் இருவர் பெறும் தேசிய விருது
சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தரமான படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் சமீபத்தில் கார்த்தி நடித்த விருமன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜோதிகா அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். மம்முட்டியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா தனியாக அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் பலருக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இந்த விருது சூர்யா ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும், கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமனார் ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் ஒன்றாக விருது வாங்கினர். இந்த ஆண்டு கணவன் மனைவி விருதை ஒன்றாக வாங்கியுள்ளனர்.