ஆஹா.. சூர்யா மறுபடியும் பாடிட்டார்.. ரெடியாகுங்க.. !

Recommended Video

ஆஹா.. சூர்யா மறுபடியும் பாடிட்டார்.. ரெடியாகுங்க.. !

சென்னை: மீண்டும் சூர்யா ஒரு பாட்டு பாடியுள்ளார். இந்த முறை அது மரண மாஸாக இருக்கும் என அவரை பாட வைத்த ஜிவி பிரகாஷே கூறியுள்ளார்.

அஞ்சான் படத்தில் சூர்யா ஒரு பாட்டு பாடியிருப்பார். துரதிர்ஷ்டவசமாக படம் சரியாக போகாததால் அவரது பாடலும் அப்படியே அமுங்கி விட்டது. ஆனாலும் ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி பாடல் இன்று வரை சூர்யா ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

surya lends his voice once more for soorarai pottru

இப்போது மீண்டும் ஒரு பாடல் பாடியுள்ளார் சூர்யா. சூரரைப் போற்று படத்தில்தான் ஜிவி பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் சூர்யா. அதை பிரகாஷே சொல்லியுள்ளார். பாட்டு மரண மாஸ் ரேப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரகாஷ். படம் வரட்டும் பார்க்கலாம்..!

கமெடியில் உச்சகட்டம் என்றால் அது கவுண்டமணிக்குப் பிறகு வடிவேலுதான். நீண்ட இடைவெளி ஆகி விட்டது அவர் நடித்து. இப்போது கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இதை அவரே சந்தோஷமாக கூறியுள்ளார். சந்தானம் இல்லாத சினிமாவில் காமெடி பெரிிய வெற்றிடமாக உள்ளது. சூரி, யோகி பாபு சிலர்தான் உள்ளனர். எனவே வடிவேலு கொடுக்கப் போகும் ரீ என்ட்ரி மிகப் பெரிய விருந்தாக அமையும் என நம்பலாம்.

surya lends his voice once more for soorarai pottru


வடிவேலு இடத்தை இதுவரை யாரும் நிரப்பவில்லை. நிரப்பவும் முடியவில்லை. சந்தானம் தனி டிராக். சூரி நிரப்ப முயன்றார். முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் வடிவேலுவே தனது இடத்திற்கு வந்து அமருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிக் பாஸ் ஹரீஷ் கல்யாண் புதிய படத்துடன் ரெடியாகி வருகிறார். தனுசு ராசி நண்பர்களே..இதுதான் படத்தின் பெயர். புதியவர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிகில் மோனிகா நாயகியாக நடித்துள்ளார். மக்களுக்குப் பிடித்த கேரக்டரில் வருகிறாராம் ஹரீஷ். இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இளமை ததும்பும் ஸ்டோரி இது. யோி பாபு படத்தில் இருக்கிறார். எனவே காமெடிக்குப் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

காமெடியனாக கலக்கி வந்த சந்தானம் பின்னர் ஹீரோவாக மாறினார். இதனால் அவரது டைப் காமெடி காலியாகி போனது. ஆனால் ஹீரோவாகவும் அவர் பெரிய இடத்திற்குப் போகவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டுதான் உள்ளார். அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம் டிக்கிலோனா. பெரிய பட்ஜெட் படமாக எடுத்துள்ளனராம். படத்தில் ஹர்பஜன் சிங்கும் இருக்கிறார் என்பது சிறப்பு.

சாலைப் பாதுகாப்பை வைத்து எடுக்கப்பட்டுள்ள புதிய படம்தான் பச்சை விளக்கு. இப்படத்தை டாக்டர் மாறன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் 2 குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இதை உருவாக்கியுள்ளாராம் மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X