ஆரம்பமானது சூர்யா- லிங்குசாமி புதிய படம்!

By Shankar

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை சூர்யாவின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் கேரக்டருக்காக தாடி வளர்க்கிறார் சூர்யா. கடந்த வாரம்தான் சென்னையில் போட்டோஷூட் முடிந்தது.

அடுத்து மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சமந்தா

சமந்தா

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. அவருடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் வித்யூத் ஜம்வால் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேல் படத்துக்குப் பிறகு சூர்யா படத்துக்கு அவர் இப்போதுதான் இசையமைக்கிறார்.

சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது இந்தப் படம்.

தலைப்பு

தலைப்பு

முதலில் இப்படத்துக்கு ரவுடி என தலைப்பு வைத்ததாக செய்தி வெளியானது. ஆனால் இதனை லிங்குசாமி மறுத்துவிட்டார். தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்குகிறது.

மும்பை - ஹைதராபாத்

மும்பை - ஹைதராபாத்

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்த ஷெட்யூல் ஹைதராபாதிலும் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X