Retro box office collection day 1: ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூல்.. கங்குவாவை முந்தினாரா சூர்யா

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே தந்து வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யாவிற்கு கட்டாய வெற்றி தேவை. இப்படம் வெளியாவதற்கு முன்பே கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்கள் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படம் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று வெளியானது. காதலுக்காக அடிதடியை விட நினைக்கும் பாரி. அவனை துரத்தும் வளர்ப்பு தந்தை என ரெட்ரோ படத்தின் கதை தொடர்கிறது. இப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் கிளாடியேட்டர் தரத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் படத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்பட்ததின் முதல் நாள் வசூல் நிலவரத்தை ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

surya massive film retro box office colelction day 1

ரெட்ரோ முதல் நாள் வசூல்: கங்குவா படத்தை விட ரெட்ரோ திரைப்படம் முதல் நாள் வசூலில் டல் அடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோன்று வசூலிலும் கங்குவாதான் முதலிடத்தில் இருக்கிறதாம். ரெட்ரோ படம் இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடியை தொட்டுள்ளது. ஆனால், கங்குவா திரைப்படம் உலகளவில் ரூ.45 கோடி முதல் 50 கோடி வரை வசூல் செய்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரெட்ரோ திரைப்படம் கங்குவா படத்தின் சாதனைக்கு பக்கத்தில் கூட செல்லவில்லை என தெரிகிறது. இதனால், விநியோகஸ்தர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

முதல் நாள் காட்சி: ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் 80 % காட்சிகள் ஹவுஸ் புல்லாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வசூலில் மந்தம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டதாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கங்குவாவை தாெடர்ந்து ரெட்ரோ திரைப்படமும் தோல்வியை நோக்கி செல்வதாகவும் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், நானி நடிப்பில் வெளியாகியுள்ள ஹிட் 3 திரைப்படம் 11.96 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். நானி கரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

surya massive film retro box office colelction day 1

ரெட்ரோ சோதிக்கிறதா: ரெட்ரோ படத்தை பார்த்த ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசுவது போல் முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த எமோஷனல் அம்சங்களில் பாதி கூட இரண்டாம் பாதியில் சுத்தமாக மிஸ்ஸிங் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமானில் ஆரம்பிக்கும் காட்சிகள் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லையாம். இதனால் தான் ரெட்ரோ படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் மேஜிக் இதில் மிஸ் ஆகியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கங்குவா படத்தை விட ரெட்ரோ படத்தை பார்க்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X