மீண்டும் சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. தள்ளிப்போன சூரரைப் போற்று!

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குதான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, பராஸ் ராவல் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப்போற்று. காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

surya movie postponed to next summer

தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் சூர்யாவே இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
surya movie postponed to next summer

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கான டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் எடுக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தள்ளிப்போயுள்ளதால், மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ" திரைப்படத்திற்கு போட்டி குறைந்துள்ளது.

surya movie postponed to next summer

'இரும்புத்திரை' மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படத்தில் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
surya movie postponed to next summer

காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானதை ஒட்டி, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம், ஆயுத பூஜைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காப்பான் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரமே செப்டம்பர் 27-ம் தேதி வெளியானது நம்ம வீட்டுப்பிள்ளை.
surya movie postponed to next summer

இந்த முறை இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X