கவுதமும் இல்லை, லிங்குவும் இல்லை... நளன் குமாரசாமி இயக்கத்தில் சூர்யா?

By Shankar

சென்னை: சூது கவ்வும் படத்தை இயக்கிய நளன் குமாரசாமி இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'சிங்கம் 2' படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் கதை சரியில்லாததால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லிங்குசாமி

லிங்குசாமி

பின்னர், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்தனர். சமந்தா ஜோடியாக நடிப்பார் என்றார்கள்.

சீமான் கதையை சுட்ட லிங்கு

சீமான் கதையை சுட்ட லிங்கு

ஆனால், லிங்குசாமியின் கதையும், சீமான் இயக்கிவரும் ‘பகலவன்' கதையும் ஒன்றுபோல இருந்ததால் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதையை தயார் செய்து வருகிறார்.

திரைக்கதை ரெடியாவதற்கு சில மாதங்களாகும் என்பதால் இந்த படத்திலும் சூர்யா நடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏஎல் விஜய்

ஏஎல் விஜய்

இயக்குனர் விஜய்யும் சூர்யாவிடம் கதை சொல்லி கால்ஷீட்டை வாங்கி வைத்துள்ளார். ஆனால், விஜய் தற்போது 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை வைத்து ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகுதான் சூர்யாவை இயக்கப் போகிறார் விஜய்.

நலன் குமாரசாமிக்கு லக்...

நலன் குமாரசாமிக்கு லக்...

இதற்கிடையில், ‘சூதுகவ்வும்' இயக்குனர் நளன் குமாரசாமி சூர்யாவை சந்தித்து கதை சொன்னாராம்.

சூர்யாவுக்கும் அவர் கூறிய கதை பிடித்துள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து முடிந்துவிட்டதாம். பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.

சிங்கம் 2 வெற்றியைக் காப்பாற்ற...

சிங்கம் 2 வெற்றியைக் காப்பாற்ற...

அடுத்தடுத்து இரண்டு படங்களில் சறுக்கிய சூர்யா, சிங்கம் 2 மூலம் பிரமாண்ட வெற்றியைப் பார்த்துள்ளார். அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவே கதை விஷயத்தில் இத்தனை சிரத்தை காட்டுகிறாராம்.

More from Filmibeat

Read more about: surya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X