இரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!

By

சென்னை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நடிகர் ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

IPL 2020: Suresh Raina Breaks Silence | OneIndia Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அதிரடி பேட்ஸ்மேனான இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்.

தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் தானும் விலகுவதாக அறிவித்தார் ரெய்னா.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்நிலையில், 13-வது ஐ.பி.எல். தொடர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னாவும் அங்கு சென்றிருந்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில், சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள், வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் இந்தியா திரும்பினார். கடந்த மாதம் 20 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்தார்.

நடத்தப்பட்ட தாக்குதல்

நடத்தப்பட்ட தாக்குதல்

அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அணி நிர்வாகம் மீதான அதிருப்தி காரணமாக சுரேஷ் ரெய்னா விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி டுவிட்டரில் எழுதியுள்ள ரெய்னா கூறியிருப்பதாவது:

போராடி வருகிறார்

போராடி வருகிறார்

பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் அவர் மகன்களும் பலமாகக் காயமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் உறவினரும் மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார்.

கொடுமையான செயல்

கொடுமையான செயல்

அன்று என்ன நடந்தது என்பது இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது தெரிய வேண்டும். அவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இரக்கமற்ற குற்றவாளிகள்

இரக்கமற்ற குற்றவாளிகள்

இதையடுத்து பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் ரெய்னாவுக்கு ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில், ஆழ்ந்த இரங்கல், உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம். இரக்கமற்ற குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரை போல நடிகர் துல்கர் சல்மானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X