Don't Miss!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
8 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய வில்லன் கேரக்டர் குறித்து கணித்த சூர்யா.. ஆனாலும் கண்டீஷன் இருக்காம்!
சென்னை : நடிகர் கமல், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்றுள்ளது விக்ரம் படம்.
இந்தப் படத்தில் விக்ரம் 3 மற்றும் கைதி 2 படங்களுக்கான லீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 படங்கள் இணைந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 வயதில் குடும்ப நண்பரால்..பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் !

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி, காயத்ரி, மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்தை ஒருங்கே இணைத்து விக்ரம் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் தற்போது வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

ரூ. 100 கோடியை எட்டிய விக்ரம்
சர்வதேச பாக்ஸ் ஆபிசில் கடந்த இரு நாட்களில் மட்டுமே 100 கோடி வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே கடந்த இரு தினங்களில் 43 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள இந்தப் படம் அவருக்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.

தொய்வில்லாத திரைக்கதை
ரசிகர்கள் அவரையும் படத்தையும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து வாரயிறுதி நாளான இன்றும் படத்தின் வசூல் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தது. எந்த இடத்திலும் ஒரு தொய்வு காணப்படவில்லை. அனைத்து காட்சிகளுமே சிறப்பாக காணப்பட்டது.

அடுத்தப்படத்திற்கான லீட்
இந்நிலையில் இந்தப் படத்தில் ஹாலிவுட் பாணியில் தனது அடுத்தப்படங்களுக்கான லீடை இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார். இதற்காகவே மிரட்டலான சூர்யாவின் கதாபாத்திரம் உருவாகியிருந்தது. அவரும் அடுத்த பாகத்திற்கான ஓபனிங்கை சிறப்பாகவே செய்து எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார்.

விக்ரம் + கைதி?
ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக தோன்றிய அவர், டில்லி மற்றும் விக்ரமை தேடும் டாஸ்க் குறித்து இறுதியில் மிரட்டலாக பேசுவார். இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கைதி படமும் மிக்ஸ் ஆகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்கவுள்ள நிலையில், அதை தொடர்ந்து விக்ரம் 3 படத்தை இயக்கவுள்ளார். இதை கமல்ஹாசன் முன்னதாக பிரமோஷனின் போது மேடையிலேயே அறிவித்தார். விக்ரம் 3 மற்றும் கைதி 2 என இரண்டு படங்களை அவர் அடுத்தடுத்து இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மூன்று நாயகர்கள்
இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்த சீனையே மாற்றியுள்ளது. அவர் கைதியின் டில்லி மற்றும் விக்ரம் படத்தின் விக்ரம் ஆகியோரை தேடுவதாகவே அடுத்தப்படம் அமையும் என்றால் இந்தப் படத்தில் கமல்ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆயினும் இதுகுறித்து லோகேஷ்தான் அறிவிக்க வேண்டும்.

8 ஆண்டுக்கு முன்பு கணித்த சூர்யா
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய சூர்யா, வீட்டில் தான் சைலண்ட் வில்லன் என்றும் கார்த்தி நல்ல பையன் என்றும் குறிப்பிட்டு, அதேபோல படத்திலும் தான் வில்லனாகவே நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஒரு கண்டீஷன் வைத்துள்ளார் சூர்யா. க்ளைமாக்சில் தான் அடி வாங்க மாட்டேன் என்பதே அது.
|
நிறைவேறுமா சூர்யா விருப்பம்?
இந்நிலையில் தற்போது விக்ரம் 3 படத்தில் கைதி பட கார்த்தியின் டில்லி கேரக்டர் நடித்தால் சூர்யாவின் விருப்பம் நிறைவேறும். சூர்யா -கார்த்தி இணைந்து நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பமும் நிறைவேறும். அதிலும் மிரட்டலான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தக் கூட்டணி நடந்தால் அது இன்னும் சிறப்பாக அமையும்.

விக்ரம் 3க்காக ரசிகர்கள் வெயிட்டிங்
தற்போது விக்ரம் படம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ள நிலையில், லோகேஷ் இயக்கவுள்ள தளபதி 67 படத்திற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். ஆனால் அந்தப் படத்தை காட்டிலும் விக்ரம் 3 படம் எப்படி அமையும் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.